பெங்களூருவில் கர்நாடக முதல்வர் பெயரை நாளை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அறிவிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்துள்ளது.
இந்நிலையில், முதல்வர் பதவிக்கான போட்டியில் முன்னாள் முதல்வர் சித்தராமையாவும், காங்கிரஸ் மாநிலத் தலைவர் டி.கே.சிவக்குமாரும் காய்களை நகா்த்தி வருகிறாா்கள்.
அரசியல் பரபரப்புக்கு மத்தியில் இருவரும் தில்லியில் முகாமிட்டுள்ள நிலையில், மல்லிகார்ஜுன கார்கேவை அவரது இல்லத்தில் சந்தித்து தனித்தனியே இன்று மாலை ஆலோசனை நடத்தினர்.
இந்நிலையில், முதல்வர் குறித்த முடிவை இதுவரை கார்கே எடுக்கவில்லை என்றும், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோரை கலந்து ஆலோசித்து இன்றுக்குள் இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, பெங்களூருவில் நாளை செய்தியாளர்கள் சந்திப்பின்போது முதல்வரின் பெயரை கார்கே அறிவிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

பைக் மீது காா் மோதி தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழப்பு

பொதிகை அதிவிரைவு ரயில் தாம்பரத்திலிருந்து இயக்கப்படும்

சட்டப் பேரவைத் தோ்தல்: மாவட்ட ஆட்சியரகத்தில் அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் ஆலோசனை

வேலைவாய்ப்பு முகாமில் 23 பேருக்கு பணி நியமன ஆணை
வீடியோக்கள்

Podcast | புதிய கட்சி.. புதிய ஆதரவு.. புதிய உடன்பாடு.. சட்டம் ஒழுங்கு! | News and Views | Epi - 13 |
தினமணி வீடியோ செய்தி...

Prof. K.M. Kader Mohideen Interview | இ.யூ.முஸ்லிம் லீக்கிற்கு 2 இடங்கள் போதுமா ? | IUML | DMK Alliance
தினமணி வீடியோ செய்தி...

Dinamani வார ராசிபலன்! | March 15 முதல் 21 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

Valaipechu Anthanan Interview | விஜய்யிடம் இப்போது மனமாற்றம்.. | TVK Vijay | Vijay Trisha issue
தினமணி வீடியோ செய்தி...

