தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

கர்நாடக முன்னாள் அமைச்சர் மீது வழக்குப்பதிவு!

கர்நாடக முதல்வர் சித்தராமையாவை விமர்சித்து பேசிய முன்னாள் அமைச்சர் அஸ்வந்த் நாராயண் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

News image

முன்னாள் அமைச்சர் அஸ்வந்த நாராயண்

Updated On :25 மே 2023, 3:36 am

DIN

கர்நாடக முதல்வர் சித்தராமையாவை விமர்சித்து பேசிய முன்னாள் அமைச்சரும் பாஜக எம்.எல்.ஏ.வுமான அஸ்வந்த் நாராயண் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கடந்த பிப்ரவரி மாதம் தேர்தல் பிரசாரத்தின்போது, சித்தராமையாவை திப்பு சுல்தானுடன் ஒப்பிட்டு அப்போதைய அமைச்சர் அஸ்வந்த நாராயண் கடுமையான விமர்சித்திருந்தார்.

இதுகுறித்து காவல்துறையினரிடம் காங்கிரஸ் கட்சியினர் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்தது.

இந்நிலையில், கர்நாடக சட்டபேரவைத் தேர்தலில் பெரும்பான்மையுடன் காங்கிரஸ் வெற்றி பெற்ற நிலையில், கடந்த சனிக்கிழமை புதிய முதல்வராக சித்தராமையா பதவியேற்றுக் கொண்டார்.

இதனைத் தொடர்ந்து, அஸ்வந்த் நாராயண் மீது காங்கிரஸ் கட்சியின்
மைசூரு மாவட்ட தலைவர் விஜய்குமார் தேவராஜா காவல் நிலையத்தில் புதிதாக ஒரு புகாரை அளித்துள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில், அஸ்வந்த நாராயண் மீது கலவரத்தை தூண்டும் வகையில் பேசுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.