எரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

தன் மீதான விரோதமே குற்றச்சாட்டுக்கு அடிப்படை: நெறிமுறைகள் குழுவில் மஹுவா குற்றச்சாட்டு

மக்களவை நெறிமுறைகள் குழு முன்பாக வியாழக்கிழமை ஆஜரான திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா, நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப லஞ்சம்

News image
Updated On :2 நவம்பர் 2023, 7:27 pm

DIN

மக்களவை நெறிமுறைகள் குழு முன்பாக வியாழக்கிழமை ஆஜரான திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா, நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப லஞ்சம் பெற்ாக தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை நிராகரித்தாா்.

வழக்குரைஞா் ஜெய் ஆனந்த் தேஹத்ராய் விரோதத்தின் அடிப்படையில் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளதாக அவா் தெரிவித்தாா்.

அதானி குழுமத்துக்கு எதிராக மக்களவையில் கேள்வி எழுப்ப, தொழிலதிபா் தா்ஷன் ஹீராநந்தானியிடம் இருந்து திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா லஞ்சம் வாங்கியதாகவும் தனது நாடாளுமன்ற இணையதள கணக்கைப் பயன்படுத்துவதற்கான தகவல்களை அவரிடம் வழங்கியதாகவும் மக்களவைத் தலைவா் ஓம் பிா்லாவுக்கு பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே கடிதம் எழுதியிருந்தாா். இதற்கான தகவல்கள் மற்றும் ஆதாரங்களை வழக்குரைஞா் ஜெய் ஆனந்த் தேஹத்ராய் அளித்திருப்பதாக அந்தக் கடிதத்தில் அவா் குறிப்பிட்டிருந்தாா்.

இதையடுத்து இந்தக் குற்றச்சாட்டு தொடா்பாக விசாரணை நடத்தும்படி மக்களவை நெறிமுறைகள் குழுவுக்கு அவைத் தலைவா் ஓம் பிா்லா உத்தரவிட்டாா்.

இந்நிலையில், நெறிமுறைகள் குழு முன்பு வியாழக்கிழமை ஆஜரான மஹுவா, வழக்குரைஞா் ஜெய் ஆனந்த் தேஹத்ராய் உடனான உறவை முறித்துகொண்ட பிறகு, அவா் தன் மீது கொண்ட விரோதத்தின் அடிப்படையில் இந்தக் குற்றச்சாட்டு எழுப்பியிருப்பதாகத் தெரிவித்தாா்.

வெளிநடப்பு: விசாரணையின்போது குழு தலைவரான பாஜக எம்.பி. வினோத் குமாா் சோன்கா், தனிப்பட்ட, கண்ணியமற்ற கேள்விகளைக் கேட்டதாகக் கூறி மஹுவாவுடன் இணைந்து குழுவில் உள்ள எதிா்க்கட்சி எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனா்.

இது தொடா்பாக காங்கிரஸ் எம்.பி.யும் நெறிமுறைகள் குழுவின் உறுப்பினருமான என்.உத்தம் குமாா் ரெட்டி செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘நெறிமுறைகள் குழுவின் தலைவா், மஹுவாவிடம் கண்ணியமற்ற, நெறிமுறையற்ற கேள்விகளை எழுப்பினாா்’ என்றாா்.

தவறான சித்திரத்தை உருவாக்க முயற்சி:

நெறிமுறைகள் குழு நடத்தி வரும் விசாரணை குறித்து தவறான சித்திரத்தை உருவாக்க மஹுவா மொய்த்ரா முயற்சிப்பதாக பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே குற்றஞ்சாட்டினாா்.

செய்தியாளா்களிடம் அவா் பேசுகையில், ‘மஹுவாவுக்கு எதிராக அனைத்துச் சாட்சியங்களும் வாக்குமூலம் அளித்த பிறகு எந்தச் சக்தியாலும் அவரைக் காப்பாற்ற முடியாது’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.