40 தொகுதிகளைக் கொண்ட மிசோரம் மாநிலத்தில் நவம்பர் 7-ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் இறுதி கட்ட பிரச்சாரங்களை தீவிரமாக செய்து வருகின்றன.
அதனை முன்னிட்டு எக்ஸ் தளத்தில் மிசோரம் குறித்து பதிவிட்டுள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பழங்குடியினரிடம் இருந்து நிலங்களைப் பறிக்க பாஜக முயன்று வருகிறது என குற்றம் சாட்டியுள்ளார்.
இதையும் படிக்க: ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றம் செல்லும் கேரள அரசு!
அவர் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது, “பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். மிசோரமில் பழங்குடியின மக்களிடம் இருந்து நிலங்களைப் பறித்து அவர்களுடைய நண்பர்களுக்கு வழங்க முயற்சிக்கின்றன. மிசோ தேசிய முன்னணி மற்றும் சோரம் மக்கள் இயக்கம் ஆகியவை பாஜகவின் அதிகாரப்பூர்வமற்ற முகவர்களாக செயல்படுகின்றன.
1986-ஆம் ஆண்டு அமைதி ஒப்பந்தத்தின் மூலம் மிசோரமில் அமைதியை நிலைநாட்டியவர் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி. மிசோரமின் வளர்ச்சியே காங்கிரசின் குறிக்கோளாகும். ஆனால் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் ஆகியவை பன்மைத்துவத்துக்கும், வளர்ச்சிக்கும் எதிரானவை." என்று தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நடிகை த்ரிஷா வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்!

கைவிடப்பட்ட பிரசாந்த் - ஹரி திரைப்படம்?
சென்னை அப்போலோ மருத்துவமனையில் ராமதாஸ் அனுமதி

"IPL பார்ப்பதுதான் அவர் வேலையா?" முதல்வரை விமர்சித்த அண்ணாமலை | DMK | BJP
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


