மசூதி சுவர்களில் ஜெய் ஸ்ரீராம் வாசகம்: உ.பி.யில் பரபரப்பு
உத்தர பிரதேசத்தில் மசூதியின் சுவர்களில் ஜெய் ஸ்ரீராம் வாசகம் இடம்பெற்ற விவகாரத்தில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


உத்தர பிரதேசத்தில் மசூதியின் சுவர்களில் ஜெய் ஸ்ரீராம் வாசகம் இடம்பெற்ற விவகாரத்தில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
உத்தரபிரதேச மாநிலம், பாக்பத் மாவட்டத்தில் உள்ள சரூர்பூர் கலான் கிராமத்தில் மசூதி ஒன்றின் சுவர்கள் மற்றும் கதவுகளில் 'ஜெய் ஸ்ரீராம்' என்கிற வாசகத்தை மர்ம நபர்கள் யாரோ எழுதியுள்ளனர்.
வெள்ளிக்கிழமை காலை வழக்கம்போல் மசூதியைத் திறக்க வந்தபோது, மசூதியின் கதவு மற்றும் சுவர்களில் ‘ஜெய் ஸ்ரீராம்’என்று எழுதப்பட்டிருந்ததைக் கண்ட பாபு கான் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மசூதியின் சுவர்களுக்கு வர்ணம் பூசியுள்ளனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
இது குறித்து கோல்வாலி காவல் நிலைய அதிகாரி ராகேஷ் குமார் சிங் கூறுகையில், இரவு நேரத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும், குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும் அவர் கூறினார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...