2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை! ஆஸ்கர் விருது விழா கோலாகலம்!
/

மிசோரம், சத்தீஸ்கர் தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது

சத்தீஸ்கரில் முதல்கட்ட தேர்தல், மிசோரம் பேரவைத் தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவடைந்தது. 

News image
Updated On :5 நவம்பர் 2023, 12:38 pm

DIN

சத்தீஸ்கரில் முதல்கட்ட தேர்தல், மிசோரம் பேரவைத் தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவடைந்தது. 

90 தொகுதிகளைக் கொண்ட சத்தீஸ்கரில் நவம்பா் 7, 17 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. அதில் முதல்கட்டமாக  20 தொகுதிகளில் நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இதையொட்டி அங்கு பிரதமர் மோடி, ராகுல் காந்தி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அதேசமயம் வடகிழக்கு மாநிலமான மிசோரமிலும் நவம்பர் 7-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. 

மிசோரத்துக்கு நேரடியாக செல்லாமல் விடியோ மட்டும் வெளியிட்டு பிரதமர் மோடி பிரசாரத்தில் ஈடுபட்டார். பிரமர் மோடியுடன் ஒரே மேடையில் பிரசாரத்தில் பங்கேற்க மாட்டேன் என்று மிசோரம் முதல்வர் ஜோரம் தங்கா தெரிவித்திருந்தார். 

மிசோரம் முதல்வர் ஜோரம் தங்காவின் முடிவால் அங்கு பிரசாரத்திற்கு பிரதமர் மோடி செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.