ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் போட்டியிடும் 2 பேர் கொண்ட ஐந்தாம் கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று (நவம்பர் 6) அக்கட்சி வெளியிட்டது.
ஆம் ஆத்மி கட்சி முதற்கட்ட பட்டியலில் 23 வேட்பாளர்களையும், 2-ம் கட்ட பட்டியலில் 21 வேட்பாளர்களையும், 3-ம் கட்ட பட்டியலில் 16 வேட்பாளர்களையும், 4-ம் கட்ட பட்டியலில் 26 வேட்பாளர்களையும் அறிவித்தது.
200 தொகுதிகளைக் கொண்ட ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு நவம்பர் 6 கடைசி நாளாகும். அதன்படி இன்று அறிவிக்கப்பட்டுள்ள 2 வேட்பாளர்களையும் சேர்த்து, ராஜஸ்தானில் 88 தொகுதிகளில் வேட்பாளர்களைக் களமிறக்கியுள்ளது ஆம் ஆத்மி கட்சி.
இதேபோல சத்தீஸ்கரில் 57 தொகுதிகளிலும், மத்திய பிரதேசத்தில் 70 தொகுதிகளிலும் அக்கட்சி போட்டியிடுகிறது.
ராஜஸ்தானில் நவம்பர் 25-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. டிசம்பர் 3 அன்று வாக்குகள் எண்ணப்பட்டு, தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும்.
2018-ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் 99 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. பாஜக 73 தொகுதிகளில் வெற்றி பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பிடித்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!

ரூ. 299 மதிப்புள்ள ஆடையை வாங்க முயன்று ரூ. 1 லட்சத்தை இழந்த செவிலியர்!
நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டு இன்று வெளியீடு! எங்கே பதிவிறக்கம் செய்யலாம்?

கவிதா தொடங்கிய டிஆர்எஸ் கட்சிக்கு ரேவந்த் ரெட்டி நிதியுதவி: பாஜக
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

