தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

'பாரத் ஆட்டா' என்றால் என்ன? மானிய விலையில் கிலோ ரூ.27!

முதல் கட்டமாக 100 நடமாடும் விற்பனை (வேன்கள்) மையங்களைத் தொடக்கி வைத்தார். 

News image
பாரத் ஆட்டா விற்பனையைத் தொடக்கிவைக்கும் அமைச்சர் பியூஷ் கோயல்
Updated On :6 நவம்பர் 2023, 1:27 pm

DIN


பாரத் ஆட்டா என்னும் மானிய விலை கோதுமை மாவு விற்பனையை உணவு மற்றும் விநியோகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் இன்று (நவ. 6) தொடக்கி வைத்தார். முதல் கட்டமாக 100 நடமாடும் விற்பனை (வேன்கள்) மையங்களைத் தொடக்கி வைத்தார். 

இந்திய தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பின் கீழ் இந்த நடமாடும் விற்பனை மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. மேலும், மற்ற கூட்டுறவு அமைப்பு சந்தைகளின் கீழ் செயல்படும் கடைகளிலும் மானிய விலையிலான பாரத் ஆட்டா கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

விலையேற்றம் காரணமாக இந்திய சந்தைகளில் கோதுமை பற்றாக்குறை நிலவுகிறது. இதனைக் கருத்தில் கொண்டு மானிய விலையிலான கோதுமை மாவு விற்பனையை மத்திய அரசு தொடங்கியுள்ளது. இதற்கு பாரத் ஆட்டா எனப் பெயரிடப்பட்டுள்ளது.

Story image

பாரத் ஆட்டா என்ற பெயரில் மானிய விலையில் ஒரு கிலோ கோதுமை மாவு ரூ.27.50 காசுகளுக்கு விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. முதல் கட்டமாக வாகனங்கள் மூலம் பாரத் ஆட்டா விற்பனை செய்யத் திட்டமிடப்பட்டது. 

Story image

அதன்படி இன்று 100 நடமாடும் பாரத் ஆட்டா விற்பனை மையங்களை மத்திய உணவுத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தொடக்கி வைத்தார். இதற்காக 2.5 மெட்ரிக் டன் கோதுமை ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.