காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

தலைமைத் தகவல் ஆணையராக ஹீராலால் சமாரியா பதவியேற்பு!

இந்தியாவின் 12-வது தலைமைத் தகவல் ஆணையராகப் பதவியேற்றார் ராஜஸ்தானைச் சேர்ந்த ஹீராலால் சமாரியா.

Published On :

இந்தியாவின் தலைமைத் தகவல் ஆணையராக ஹீராலால் சமாரியா இன்று (நவம்பர் 6) பதவியேற்றுக் கொண்டார். 

குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஹீராலால் சமாரியாவுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். 

ராஜஸ்தானைச் சேர்ந்த ஹீராலால் சமாரியா மத்திய உரம் மற்றும் வேதிப்பொருட்கள் துறையின் இணைச் செயலாளராகவும், மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் செயலாளராகவும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.

2005-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மத்திய தகவல் ஆணையத்தின் தலைமைப் பொறுப்புக்கு வந்துள்ள முதல் தலித் நபர் என்ற பெருமையை ஹீராலால் சமாரியா பெற்றுள்ளார். 

இதற்கு முன்பு இப்பதவியில் இருந்த ஒய்.கே.சின்ஹாவின் பதவிக்காலம் அக்டோபர் 3-ஆம் தேதியுடன் முடிவடைந்ததைத் தொடர்ந்து ஒரு மாத காலமாக இப்பதவி காலியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.