சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

இந்தியாவே உங்களால் தலைகுனிகிறது: நரேந்திர மோடி!

பிகார் மாநில முதல்வரின் சர்ச்சையான பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.

News image
Updated On :8 நவம்பர் 2023, 12:14 pm

DIN

பிகார் முதல்வர் நிதீஷ் குமாரின் சர்ச்சைக்குரிய பேச்சுக்கு பல தரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.

பெண்களின் கல்வியையும் மக்கள்தொகை கட்டுப்பாட்டையும் இணைத்து அவர் சட்ட பேரவையில் பேசியது சர்ச்சையானது.

“நான் பேசியது உங்களைக் காயப்படுத்தியிருந்தால் மன்னித்து கொள்ளுங்கள்” என பகிரங்க மன்னிப்பு கேட்ட போதும் அவரைப் பதவி விலக எதிர்க் கட்சிகள் கண்டித்து வருகின்றன. 

இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி மத்திய பிரதேசத்தில் பேசும்போது, “இண்டியா கூட்டணியின் முக்கிய தலைவர்களில் ஒருவரும் பெருமைமிகு கூட்டணியின் தலைவருமானவர், அநாகரிகமான வார்த்தைகளில் பெண்கள் குறித்து சட்ட பேரவையில் நேற்று பேசியுள்ளார். இது குறித்து அவர்கள் யரும் வெட்கப்படவில்லை. இண்டியா கூட்டணி தலைவர்கள் யாரும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. பெண்கள் விஷயத்தில் இப்படி நடந்து கொள்பவர்கள், ஏதாவது உங்களுக்கு நல்லது செய்வார்கள் என எதிர்பார்க்கிறீர்களா? அவர்கள் என்றைக்காவது பெண்களை மதித்திருக்கிறார்களா? உலகத்தின் முன் இந்தியாவைத் தலைகுனிய வைக்கிறீர்கள். தாய்மார்கள் மற்றும் தங்கைகளுக்காக, உங்கள் தன்மானத்திற்காக நான் எதை வேண்டுமானாலும் செய்வேன்” எனப் பேசியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.