அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சரை வரவேற்ற ராஜ்நாத் சிங்!

இந்தியா வந்தடைந்த அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சரை லாய்ட் ஆஸ்டினை வரவேற்றார் இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்.
அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சரை வரவேற்ற ராஜ்நாத் சிங்!

'2+2' உரையாடலுக்காக இந்தியா வந்தடைந்த அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சரை வரவேற்றார் இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்.

வெள்ளிக்கிழமை நடைபெற உள்ள இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான ‘2+2’ வெளியுறவு மற்றும் பாதுகாப்பு அமைச்சர்கள் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்வதற்காக இந்தியத் தலைநகர் புதுதில்லிக்கு வந்த அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் லாய்ட் ஆஸ்டினை இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விமான நிலையத்தில் இன்று (நவம்.9) வரவேற்றார்.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மற்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் ஆகியோரும் இந்தப் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ள உள்ளனர்.

ராஜ்நாத்சிங் மற்றும் ஜெய்சங்கர் இருவரும் அமெரிக்க அமைச்சர்களுடன் தனித்தனியான இருதரப்பு சந்திப்புகளை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

இந்த இருதரப்பு பேச்சுவார்த்தையில் வேகமாக விரிவடைந்து வரும் இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான உறவுகள் பற்றிய விரிவான மதிப்பாய்வை மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், இந்த சந்திப்பின்போது பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப விவகாரங்கள் குறித்தும் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் லாய்ட் ஆஸ்டின் கடைசியாக 2023 ஜூன் மாதம் இந்தியா வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com