டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

ட்ரோன் மூலம் போதைப்பொருள் கடத்தல் - தடுப்பு நடவடிக்கையில் எல்லைப் பாதுகாப்பு படையினர்!

டிரோன் மூலம் போதைப் பொருள்கள் கடத்தப்படுவதாகவும் அவற்றைத் தடுக்கும் பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் எல்லைப் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :12 நவம்பர் 2023, 12:28 pm

DIN

பஞ்சாப் மாநிலத்தின் பரோபல் கிராமத்தில், குவாட்காப்டர் ட்ரோன் ஒன்று இந்தியாவின் எல்லைப் பாதுகாப்புப் படையினரால் மீட்டெடுக்கப்பட்டுள்ளது. அது சைனாவில் தயாரிக்கப்பட்டது எனக் கண்டறியப்பட்டுள்ளது.

இது குறித்து எல்லைப் பாதுகாப்பு படை வெளியிட்டுள்ள அறிக்கையில், 'பஞ்சாப் காவல்துறையும், எல்லைப் பாதுகாப்புப் படையும் இணைந்து இந்தத் தேடுதல் பணியில் ஈடுபட்டது. அதில் பரோபல் கிராமத்தின் விளைச்சல் நிலங்களுக்கு அருகே டிரோன் ஒன்று மீட்டெடுக்கப்பட்டுள்ளது' எனத் தெரிவித்துள்ளது. 

மீட்கப்பட்ட குவாட்காப்டர் , மாடல் டிஜேஐ மாவிக்-3 கிளாசிக் ரக டிரோன் எனவும் இது சைனாவில் தயாரிக்கப்பட்ட டிரோன் எனவும் எல்லைக் காவல் படை தெரிவித்துள்ளது.

மேலும், டிரோன் மூலம் போதைப்பொருள் கடத்தும் கும்பலின் மற்றுமொரு திட்டம் எல்லைப் பாதுகாப்புப் படையால் தோற்கடிக்கப்பட்டது எனவும் தெரிவித்துள்ளது. எல்லைப் பாதுகாப்புப் படையானது 3,323 கிலோமீட்டர் தொலைவுகொண்ட இந்திய-பாகிஸ்தான் எல்லைகளின் பாதுகாப்புக்கு பொறுப்பு வகிக்கிறது.

இதே நாளில் மற்றொரு டிரோன், எல்லைப் பாதுகாப்பு படை மற்றும் பஞ்சாப் காவல்துறையின் மற்றொரு கூட்டுக்  குழுவால் நெஸ்டா கிராமப் பகுதியில் மீட்டெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.