தீபாவளி: குடியரசுத் தலைவர் முர்முவுடன் பிரதமர் மோடி சந்திப்பு

தீபாவளியை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை சந்தித்து பேசினார்.
தீபாவளி: குடியரசுத் தலைவர் முர்முவுடன் பிரதமர் மோடி சந்திப்பு

புது தில்லி: தீபாவளியை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை சந்தித்து பேசினார்.

தீபாவளியயை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை குடியரசுத் தலைவர் மாளிகையில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது பரஸ்பரம் தீபாவளி வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

அதேபோன்று, குடியரசுத் தலைவரை, துணை குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், அவரது மனைவி டாக்டர் சுதேஷ் தன்கர், மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல் மற்றும் ஸ்மிருதி இரானி ஆகியோர் சந்தித்து பேசினர்.

முன்னதாக, தீபாவளியை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஞாயிற்றுக்கிழமை நாட்டு மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்தார். எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்த வாழ்த்து செய்தியில்,  "தீபாவளி என்பது மகிழ்ச்சியின் பண்டிகையாகும். இது இருளுக்கு எதிரான ஒளி, தீமையின் மீது நன்மை மற்றும் அநீதியின் மீது நீதியின் வெற்றியைக் குறிக்கும் வகையில் கொண்டாடப்படுகிறது. 

பல்வேறு மதங்கள் மற்றும் மதங்களைச் சேர்ந்தவர்கள் இந்த பண்டிகையைக் கொண்டாடி, அன்பு, சகோதரத்துவம் மற்றும் நல்லிணக்கத்தின் செய்தியைப் பரப்புகிறார்கள் என்று முர்மு தெரிவித்திருந்தார். 

இதனிடையே, தீபாவளியை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி மக்களுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார்.

எக்ஸ் சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டிருந்த வாழ்த்து செய்தியில், நாட்டில் உள்ள எனது குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள். இந்த சிறப்பு பண்டிகை அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சியையும், செழிப்பையும், நல்ல ஆரோக்கியத்தையும் வழங்கிடட்டும் என்று பிரதமர் தனது செய்தியில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஹிமாச்சலப் பிரதேசத்தின் லெப்சாவில் இந்திய ராணுவ வீரர்களுடன் ஞாயிற்றுக்கிழமை காலை தீபாவளியை கொண்டாடிய பிரதமர் நரேந்திர மோடி, ராணுவ வீரர்கள் மத்தியில் உரையாற்றிய போது, எல்லையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள வீரர்களுக்கு வாழ்த்துகள். ராமர் இருக்கும் இடமே அயோத்தி என்கிறார்கள். ஆனால் என்னை பொறுத்தவரை ராணுவ வீரர்கள் இருக்கும் இடமே அயோத்தி. வீரர்கள் இருக்கும் இடம் எந்த கோவிலுக்கும் சளைத்ததல்ல. கடந்த 30-35 ஆண்டுகளாக ராணுவ வீரர்களுடன் தீபாவளியை கொண்டாடி வருகிறேன். நான் முதல்வராகவோ, பிரதமராகவோ இல்லாத போதும் தீபாவளி நாளில் எல்லைக்கு சென்று வீரர்களுடன் கொண்டாடுவேன் என்று பேசினார்.

ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தின் 15 -ஆவது நாளான அமாவாசை அன்று தீபாவளி கொண்டாடப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com