

உத்தர பிரதேசம் சிபஹியா கிராமத்தில் ஆறு வயது சிறுவனைக் சிறுத்தை ஒன்று காட்டிற்குள் கவ்விச் சென்றுள்ளது. சிறுவன் காட்டிற்குள் சடலமாக மீட்டெடுக்கப்பட்டான். பல்ராம்பூரின் மாவட்ட ஆட்சியர் அந்த சிறுத்தையை உடனே பிடிக்க வனத்துறையினருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
பலியான சிறுவன் அருண், தன் வீட்டுக்குப்பின்னால் இருந்த வயல் பகுதிக்குச் சென்றபோது அவனைக் காட்டுக்குள் இருந்து பாய்ந்த சிறுத்தை கவ்விச்சென்றுள்ளது. சிறுவனின் கதரல் சத்தம் கேட்டு ஓடிவந்த கிராம மக்கள் அந்த சிறுத்தையைத் துரத்திச் சென்றுள்ளனர். ஆனால் சிறுத்தை கரும்புத் தோட்டத்திற்குள் புகுந்து மறைந்துள்ளது என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சில மணிநேரங்களுக்குப் பிறகு சிறுவனின் உடல் அருகிலுள்ள காட்டுப்பகுதியில் கிராம மக்களால் கண்டெடுக்கப்பட்டது. சிறுவனின் இடதுகை சிறுத்தையால் துண்டிக்கப்பட்டிருந்தது.
இதையும் படிக்க : கம்பம் மெட்டு மலைச்சாலையில் பாறை உருண்டு போக்குவரத்து பாதிப்பு
வனத்துறையின் இரண்டு குழுக்கள் சிறுத்தையைப் பிடிக்க தொடர்ந்து செயல்பட்டுவருவதாக வனத்துறை அதிகாரி டாக்டர். சேம் மாறன் எம். தெரிவித்துள்ளார். சிறுத்தையைப் பிடிப்பதற்காக இரண்டு கூண்டுகள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
மேலும் சிறுவனின் உடலில் உடற்கூராய்வு மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் முடிவுகளுக்குப்பின் குடும்பத்தாருக்கு இழப்பீடு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஒரு வாரத்திற்கு முன்பாக மூன்று வயது சிறுமியைச் சிறுத்தை பிடித்துச்சென்றது குறிப்பிடத்தக்கது. சிறுமியின் உடல் 5 நாட்களுக்குப் பின்னர் கரும்புத் தோட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.