இந்தியாவின் மரபணுவிலேயே புதுமை: பிரான்ஸில் பிரதமர் மோடி பேச்சுசேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமாகா! ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன் நீங்கள் எதிர்பார்த்த நல்ல முடிவை கூடிய விரைவில் அறிவிக்கவுள்ளேன்: ராகவா லாரன்ஸ் அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கெளதமி!பாமகவால்தான் 31 தொகுதிகளில் அதிமுக வெற்றி: சி.வி. சண்முகம்
/

தெலங்கானா: தேர்தல் அறிக்கையை வெளியிட்டது காங்கிரஸ்

தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலுக்கான காங்கிரஸின் தேர்தல் அறிக்கையை வெள்ளிக்கிழமை வெளியிட்டார் மல்லிகார்ஜுன கார்கே.

News image
Updated On :17 நவம்பர் 2023, 3:53 pm IST

தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெள்ளிக்கிழமை வெளியிட்டார் அக்கட்சியின் அகில இந்தியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே.

119 தொகுதிகளைக் கொண்ட தெலங்கானா சட்டப்பேரவைக்கு வரும் நவம்.30ல் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஆளும் பிஆர்எஸ், காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய கட்சிகளிடையே மும்முனை போட்டி நிலவி வருகிறது.

இந்நிலையில் தெலங்கானா மாநிலத்திற்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் அகில இந்தியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மாநில தலைவர் ரேவந்த் ரெட்டி ஆகியோர் இணைந்து வெள்ளிக்கிழமை வெளியிட்டனர்.

அத்துடன்  ‘அபய ஹஸ்தம்’ எனும் பெயரில் ஆறு உறுதிமொழிகளை அளித்துள்ளனர். மஹாலட்சுமி திட்டத்தின் கீழ் பெண்களுக்கு மாதம் ரூ.2,500 நிதியுதவி வழங்கப்படும். ரூ.500க்கு சமையல் எரிவாயு வழங்கப்படும். அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கிரஹ ஜோதி திட்டத்தின் கீழ் அனைத்து வீடுகளுக்கும் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும், ரூ.10 லட்சத்திற்கான மருத்துவக் காப்பீடு வழங்கப்படும் என பல்வேறு கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்துள்ளது.

தேர்தல் அறிக்கையை வெளியிட்டு பேசிய மல்லிகார்ஜுன கார்கே, “தெலங்கானா மாநிலத்திற்கு சமூகநீதி, பொருளாதார முன்னேற்றம் மற்றும் சீரான வளர்ச்சியை வழங்க காங்கிரஸ் கட்சி உறுதி பூண்டுள்ளது. கர்நாடகா உள்ளிட்ட மற்ற மாநிலங்களில் ஆட்சிக்கு வந்த உடனே தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதைப் போல, இந்த வாக்குறுதிகள் அனைத்தும் உடனே நிறைவேற்றப்படும்.” என்று கூறினார். 

தெலங்கானா சட்டப்பேரவைக்கு நவம்.30-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அதற்கான வாக்கு எண்ணிக்கை டிசம்.3-ஆம் தேதி நடத்தப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.