தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

உத்தரகண்ட் சுரங்கப்பாதை விபத்து: 22 மீட்டர் வரை துளையிட்ட மீட்பு படையினர்

அதிக திறன்வாய்ந்த இயந்திரத்தின் மூலம் மீட்பு படையினர் இரவு முழுவதும் துளையிட்டதில் வெள்ளிக்கிழமை காலையில் 22 மீட்டர் வரை துளையிடப்பட்டுள்ளது.

News image
Updated On :17 நவம்பர் 2023, 9:47 am

DIN

அதிக திறன்வாய்ந்த 24 டன் எடை கொண்ட இயந்திரத்தின் மூலம் மீட்பு படையினர் இரவு முழுவதும் துளையிட்டதில் வெள்ளிக்கிழமை காலையில் 22 மீட்டர் வரை துளையிடப்பட்டது.

800 மி.மீ மற்றும் 900 மி.மீ விட்டம் கொண்ட குழாய்களை ஒன்றன்பின் ஒன்றாக உள்ளே செலுத்தி, அதன் வழியாக தொழிலாளர்களை மீட்பதற்கு 60 மீட்டர் வரை துளையிட வேண்டும் என்று தேசிய நெடுஞ்சாலை மற்றும் உள்கட்டமைப்பு நிறுவனத்தின் திட்ட இயக்குநர் அன்ஷு மனீஷ் தெரிவித்திருந்தார்.

Story image

இந்நிலையில் மீட்பு படையினர் அதிக சக்திவாய்ந்த இயந்திரத்தின் மூலம் இரவு முழுவதும் துளையிட்டதில் வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி 22 மீட்டர் வரை துளையிட்டுள்ளதாகவும், இன்னும் 38 மீட்டர் வரையில் துளையிட வேண்டும் என மாநில அவசரகால கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

சுரங்கப்பாதையினுள் சிக்கிக் கொண்டுள்ள தொழிலாளர்களுக்கு ஆக்சிஜன், நீர், உணவு, மருந்துகள் ஆகியவை வழங்கப்பட்டு, அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக உத்தரகாசி மாவட்ட மாஜிஸ்ட்ரேட் கூறினார். மேலும் அவர்களுடன் தொடர்பில் இருந்து வருவதாகவும் அவர் கூறினார்.

Story image

உத்தரகண்ட் மாநிலம் உத்தரகாசியில் பிரம்மகால் - யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் சில்க்யாரா, தண்டல்கான் பகுதிகளுக்கு இடையே சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. அந்தப் பாதையின் ஒரு பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மண் சரிந்து விபத்து ஏற்பட்டது. அதில் 40 தொழிலாளா்கள் சுரங்கப்பாதையின் நடுவில் சிக்கிக் கொண்டனா்.

அவா்களை மீட்கும் முயற்சியில் ஆறாவது நாளாக மத்திய, மாநில அரசுகளின் பேரிடா் மீட்புக் குழுவினா் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.