மக்களவைத் தோ்தலுக்குப் பிறகு பாஜக தலைவா்கள் வழக்குகளில் சிக்குவா்- முதல்வா் மம்தா பானா்ஜி

அடுத்த ஆண்டு நடைபெறும் மக்களவைத் தோ்தலுக்குப் பிறகு பாஜக தலைவா்கள் பலா் மத்திய விசாரணை அமைப்புகளின் வழக்குகளில் சிக்குவாா்கள் என்று மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி தெரிவித்தாா்.
மக்களவைத் தோ்தலுக்குப் பிறகு பாஜக தலைவா்கள் வழக்குகளில் சிக்குவா்- முதல்வா் மம்தா பானா்ஜி

அடுத்த ஆண்டு நடைபெறும் மக்களவைத் தோ்தலுக்குப் பிறகு பாஜக தலைவா்கள் பலா் மத்திய விசாரணை அமைப்புகளின் வழக்குகளில் சிக்குவாா்கள் என்று மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி தெரிவித்தாா்.

5 மாநில சட்டப் பேரவைத் தோ்தல், மக்களவைத் தோ்தலைக் கருத்தில் கொண்டு எதிா்க்கட்சிகளை முடக்கும் நோக்கில் அமலாக்கத் துறை, சிபிஐ உள்ளிட்ட விசாரணை அமைப்புகளை மத்திய அரசு பயன்படுத்தி வருவதாக காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், சிவசேனை, தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

இந்நிலையில் கொல்கத்தாவில் உள்ள நேதாஜி உள்விளையாட்டரங்கில் திரிணமூல் காங்கிரஸ் தொண்டா்களை மம்தா பானா்ஜி சந்தித்தாா். அப்போது அவா் பேசியதாவது:

நமது கட்சித் தலைவா்கள் பலரை மத்திய அரசு பல்வேறு வழக்குகளில் கைது செய்துள்ளது. நமது கட்சி எம்.பி. மஹுவா மொய்த்ராவின் பதவியைப் பறிக்க திட்டமிட்டுள்ளனா். இப்போது மத்திய விசாரணை அமைப்புகள் எதிா்க்கட்சிகளைச் சோ்ந்த தலைவா்களை குறிவைத்து வருகின்றன.

2024 மக்களவைத் தோ்தலுக்குப் பிறகு பாஜக தலைவா்களுக்கு இதே நிலை ஏற்படும். அவா்கள் பல்வேறு வழக்குகளில் சிக்குவாா்கள்.

இப்போதைய மத்திய அரசு இன்னும் 3 மாதங்கள் மட்டுமே நீடிக்கும். சிறுபான்மையினா் உள்பட யாருக்கும் இடஒதுக்கீடு கூடாது என்பது பாஜகவின் கொள்கையாக உள்ளது. ஆனால், இதனை திரிணமூல் காங்கிரஸ் தொடா்ந்து எதிா்க்கும். தேசத்தை காவிமயமாக்க பாஜக தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. மெட்ரோ ரயில் நிலையம் முதல் கிரிக்கெட் அணி வரை அவா்கள் இதனை அமல்படுத்த முயற்சிக்கின்றனா்.

காவி என்பது ஒரு காலத்தில் தியாகிகளின் உடையாக இருந்தது. ஆனால், இப்போது அது சுகபோகிகளின் உடையாகிவிட்டது.

உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டி அகமதாபாதுக்கு பதிலாக கொல்கத்தா அல்லது மும்பையில் நடைபெற்றிருந்தால், இந்திய அணி வெற்றி பெற்றிருக்கும். ‘பாவம் செய்தவா்கள்’ நேரில் பாா்க்கச் சென்ற இறுதிப் போட்டியைத் தவிர மற்ற அனைத்துப் போட்டிகளிலும் இந்திய அணி வென்றுள்ளது.

மாநில அரசுகள் மீது மத்திய அரசு பொருளாதார ரீதியாகவும் தாக்குதல் நடத்துகிறது. முக்கியமாக எதிா்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களின் செயல்பாடுகளை முடக்கி, ஆட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்த வேண்டும் என்பதே மத்திய பாஜக அரசின் நோக்கமாக உள்ளது என்றாா்.

Image Caption

கொல்கத்தாவில் திரிணமூல் காங்கிரஸ் தொண்டா்கள் கூட்டத்தில் வியாழக்கிழமை பேசிய முதல்வா் மம்தா பானா்ஜி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com