ரஜௌரியில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி!

ஜம்மு-காஷ்மீர், ரஜௌரியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் வீரமரணம் அடைந்த 5 ராணுவ வீரர்களுக்கு மலரஞ்சலி செலுத்தினர்.
ரஜௌரியில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி!

ஜம்மு-காஷ்மீர், ரஜௌரியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் வீரமரணம் அடைந்த 5 ராணுவ வீரர்களுக்கு மலரஞ்சலி செலுத்தினர்.

5 ராணுவ வீரர்களின் உடல்கள் ரஜௌரியில் இருந்து ஜம்முவில் உள்ள ராணுவ பொது மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டு அங்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

துணைநிலை ஆளுநர் சின்ஹா, வடக்கு ராணுவ தளபதி உபேந்திர திவேதி, தலைமைச் செயலாளர் டாக்டர் ஏ கே மேத்தா, டிஜிபி ஆர் ஆர் ஸ்வைன், டிவிஷனல் கமிஷனர் ரமேஷ் குமார், ஐஜிபி ஆனந்த் ஜெயின் உள்ளிட்ட ஏராளமான ஆயுதப்படை அதிகாரிகள், பொதுமக்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் முழு ராணுவ மரியாதையுடன் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

பயங்கரவாதிகளுடன் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் தங்கள் இன்னுயிர்களைத் தியாகம் செய்தவர்கள் கர்நாடகாவின் மங்களூரு பகுதியைச் சேர்ந்த கேப்டன் எம் வி பிரஞ்சால் (63 ஆர்ஆர்), உத்தரப் பிரதேசத்தின் ஆக்ராவைச் சேர்ந்த கேப்டன் ஷுபம் குப்தா (9 பாரா), பூஞ்ச், ஜே-கே, அஜோட்டின் ஹவல்தார் அப்துல் மஜித் (பாரா); நைனிடாலின் ஹல்லி பட்லி பகுதியைச் சேர்ந்த லான்ஸ் நாயக் சஞ்சய் பிஸ்ட் மற்றும் உத்தரப் பிரதேச மாநிலம் அலிகாரைச் சேர்ந்த பாராட்ரூப்பர் சச்சின் லார் ஆகியோர் ஆவார்.

மூவர்ணக் கொடி போர்த்தப்பட்டு வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களின் சவப்பெட்டிகள் ஜம்முவில் இருந்து அவர்களின் இறுதிச் சடங்குகளுக்காக விமானம் மூலம் சொந்த ஊர்களுக்குக் கொண்டு செல்லப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com