ஆந்திர மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்புப் பணி வருகிற டிசம்பர் 9 ஆம் தேதி தொடங்கும் என்று அந்த மாநில செய்தி மற்றும் பொதுத் தொடா்புத் துறை அமைச்சர் ஸ்ரீநிவாச வேணுகோபால கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.
நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று பல்வேறு ஆட்சிகள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றன. சமீபத்தில் பிகாரில் முதல்வா் நிதீஷ் குமாா் தலைமையிலான அரசு, மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி முடிவுகளையும் வெளியிட்டது.
இதையடுத்து நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றன. காங்கிரஸ் ஆட்சியில் உள்ள மாநிலங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறி வருகிறார்.
இந்நிலையில் ஆந்திரத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று முதல்வா் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்த நிலையில் நவம்பர் மாத தொடக்கத்தில் அமைச்சரவை இதற்கு ஒப்புதல் அளித்தது.
இதையடுத்து ஆந்திரத்தில் விரிவான சாதிவாரி கணக்கெடுப்புப் பணி வருகிற டிசம்பர் 9 ஆம் தேதி தொடங்கும் என மாநில செய்தி மற்றும் பொதுத் தொடா்புத் துறை அமைச்சர் ஸ்ரீநிவாச வேணுகோபால கிருஷ்ணா தகவல் தெரிவித்துள்ளார்.
மக்களின் வாழ்க்கைத் தரத்தை மாற்றியமைக்க சாதிவாரி கணக்கெடுப்பு அவசியம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே மாநிலத்தில் 2 நாள்கள் சோதனை அடிப்படையில் சாதிவாரி கணக்கெடுப்புப் பணி மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

செங்கம் பகுதியில் சிறப்பான சேவை: அதிமுக வேட்பாளா் உறுதி
விஜய்யின் வேட்புமனுவில் கூடுதல் தகவல்கள் சோ்ப்பு! சொத்து விவரம் உயா்வு!

கேரளத்தில் பாஜக ஆட்சியமைக்க கிறிஸ்தவா்கள் ஆதரவளிக்க வேண்டும்: அமித் ஷா பிரசாரம்

காட்பாடி தவெக வேட்பாளா் உள்பட 150 போ் மீது வழக்கு
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

