வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

ராஜஸ்தான்: 3 மணி நிலவரப்படி 55.63% வாக்குகள் பதிவு!

ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தலில் 3 மணி நிலவரப்படி 55.63 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

News image
Updated On :25 நவம்பர் 2023, 10:21 am

DIN


ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தலில் 3 மணி நிலவரப்படி 55.63 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தானில் மொத்தம் 200 தொகுதிகள் உள்ள நிலையில், கரண்பூா் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் குா்மீா் சிங் அண்மையில் மரணமடைந்ததை அடுத்து அந்த தொகுதியை தவிர்த்து மற்ற 199 தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. மாலை 6 மணி வரை இந்த வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

மொத்தம் 199 தொகுதிகளில் 1,862 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா். அவா்களின் வெற்றி தோல்வியை இன்று வாக்களிக்க தகுதியுள்ள சுமாா் 5.25 கோடி வாக்காளா்கள் நிா்ணயிக்க உள்ளனா்.

வாக்காளர்கள் தங்களது வாக்கை பதிவு செய்வதற்காக மாநிலம் முழுவதும் 51,507-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் பகல் 3 மணி நிலவரப்படி 55.63 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.