மகாராஷ்டிர மாநிலம் புணேவில் கணவரைக் கொன்றதாக மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.
புணே நகரிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் கடந்த வெள்ளிக்கிழமை இந்தக் கொலைச் சம்பவம் நடந்ததாக மனைவியின் மேல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
விசாரணையில் தன் பிறந்த நாளுக்குத் துபை அழைத்துச் செல்லாத கோபத்தில் கணவரை மூக்கில் குத்தியதால் அவர் உயிரிழந்ததாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கொல்லப்பட்ட கட்டுமானத் துறைத் தொழிலதிபர் நிகில் கன்னா, ஆறு ஆண்டுகளுக்கு முன் தன் மனைவி ரேணுகாவைக் காதல் திருமணம் செய்துகொண்டுள்ளார்.
முதற்கட்ட விசாரணையில், கடந்த பிறந்த நாளுக்கு விலையுயர்ந்த பரிசுகள் தராததாலும் துபை அழைத்துச் செல்லாததாலும் கணவர் மீது ரேணுகாவுக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது. மேலும் உறவினர்கள் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கும் தன்னை அழைத்துச் செல்லாததால் சண்டை ஏற்பட்டுள்ளது.
இந்தச் சண்டையில் அவரை ஓங்கி மூக்கில் குத்தியதில், அவரது மூக்கு மற்றும் பற்கள் உடைந்து அதிக அளவில் இரத்தம் வெளியேறி அவர் உயிரழந்ததாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மன்னிக்க முடியாது... பிரபுதேவாவை விமர்சித்த பிரபல நடிகை!

இன்றைய செய்திகள் ஆகஸ்ட் 1 - நேரலை!
தேர்தல் தடைநீக்கக் கோரி சி.விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் மனு

காமன்வெல்த் போட்டி: மும்முறைத் தாண்டுதலில் பதக்கம் வென்ற தமிழக வீரர்கள்!
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview



