தேர்தல் தடைநீக்கக் கோரி சி.விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் மனுகாவிரி விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் திமுக அவசர மனு இரு முதல்வர்களும் சுமூகமாகப் பேசி தீர்க்க வேண்டும்: பிரேமலதாகபினி அணையில் இருந்து 10,000 கனஅடி நீர் திறப்பு நாட்டின் விமானப் போக்குவரத்துத் துறை அபார வளர்ச்சி கண்டுள்ளது: பிரதமர் மோடிஜூலையில் 1.06 கோடி பேர் சென்னை மெட்ரோவில் பயணம்! 20% கட்டணத் தள்ளுபடி பற்றி தெரியுமா?தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு! குவைத் மீது தொடரும் ஈரானின் தாக்குதல்! அரசுக் கட்டமைப்புகள் சேதம்! தமிழகத்துக்கான வரிப் பகிர்வுத் தொகை ரூ. 4,466 கோடி விடுவித்த மத்திய அரசு!
/

காமன்வெல்த் போட்டி: மும்முறை தாண்டுதலில் பதக்கம் வென்ற தமிழக வீரர்கள்!

கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில் மும்முறை தாண்டுதல் போட்டியில் தமிழக வீரர்கள் பதக்கம் வென்று அசத்தியுள்ளனர்.

News image

பிரவீன் சித்ரவேல் மற்றும் செல்வ பிரபு திருமாறன்

Updated On :1 ஆகஸ்ட் 2026, 7:31 pm IST

கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில் மும்முறை தாண்டுதல் போட்டியில் தமிழக வீரர்கள் பதக்கம் வென்று அசத்தியுள்ளனர்.

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அதில், மும்முறை தாண்டுதல் போட்டியில் தமிழக வீரர்கள் பிரவீன் சித்ரவேல் வெள்ளிப் பதக்கமும், செல்வ பிரபு திருமாறன் வெண்கலப் பதக்கமும் வென்றனர்.

ஆசிய போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற பிரவீன் சித்ரவேல், தற்போது கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். அவர் மும்முறை தாண்டுதல் போட்டியில் 16.58 மீட்டர் தூரம் குதித்து வெள்ளிப் பதக்கத்தை வசப்படுத்தினார்.

வெண்கலப் பதக்கம் வென்ற செல்வ பிரபு 16.52 மீட்டர் தூரம் குதித்துள்ளார். சர்வதேசப் போட்டிகளில் செல்வ பிரபு வெல்லும் முதல் பதக்கம் இதுவாகும்.

இந்தப் போட்டியில் ஜமைக்காவைச் சேர்ந்த ஜோர்டான் ஸ்காட் 16.72 மீட்டர் தூரம் குதித்து தங்கப் பதக்கம் வென்றார்.

Summary

Commonwealth Games: Athletes from Tamil Nadu win medals in the triple jump!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

விடியோக்கள்