

கர்நாடகா மாநிலம் சதாசிவா நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொருளாதார நெருக்கடி மற்றும் கடனளித்தவர்களின் துன்புறுத்தலால் இந்த தற்கொலைச் சம்பவம் நடந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
பொருளாதார சிக்கல்களைக் கையாள முடியாமல் தம்பதி, தனது மூன்று குழந்தைகளைக் கொன்று அவர்களும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டனர். இறந்துபோன தம்பதி உட்பட ஏழுபேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இறக்கும் முன் குழந்தைகளின் தந்தை பதிவு செய்துள்ள காணொளி காவல்துறையால் கைப்பற்றப்பட்டுள்ளது. அந்த காணொளியில், தங்களை இந்த முடிவு எடுக்கத் தூண்டியவர்களை தண்டிக்குமாறு மாநில உள்துறை அமைச்சர் மற்றும் காவல்துறையினரிடம் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் அவர் கபாப் விற்றுவந்ததாகவும், வறுமையின் காரணமாக பலரிடம் கடன் வாங்கியிருப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்திருந்தனர். இதுகுறித்து தன் வருத்தத்தைத் தெரிவித்த மாநில உள்துறை அமைச்சர் ஜி. பரமேஷ்வரா, இந்த வழக்கை முழுமையாக விசாரிக்கவிருப்பதாகத் தெரிவித்தார்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.