ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!வணிக சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு! டீ, காபி விலை உயர்கிறதா?மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

ஆந்திரம்: உயிரியல் பூங்காவில் கரடி தாக்கியதில் விலங்கு பராமரிப்பாளர் பலி

ஆந்திரத்தில் இந்திரா காந்தி உயிரியல் பூங்காவில் கரடி தாக்கியதில் பராமரிப்பாளர் பலியானார். 

News image
கோப்புப் படம்.
Updated On :27 நவம்பர் 2023, 4:42 pm

DIN

ஆந்திரத்தில் இந்திரா காந்தி உயிரியல் பூங்காவில் கரடி தாக்கியதில் பராமரிப்பாளர் பலியானார். 

ஆந்திர மாநிலம்,  விசாகப்பட்டினத்தில் இந்திரா காந்தி உயிரியல் பூங்கா உள்ளது. இங்கு விலங்கு பராமரிப்பாளராக நாகேஷ் பாபு(23) பணிபுரிந்து வந்தார். இன்று இவரை பூங்காவில் இமாலய வகை கறுப்புக் கரடி தாக்கியது. இதில் அவர் பலியானார்.

இதுகுறித்து விசாகப்பட்டினம் மிருகக்காட்சிசாலையின் கண்காணிப்பாளர் தெரிவித்ததாவது, நாகேஷ், விலங்குகள் இரவில் தங்கும் வீட்டில் அனைத்து கதவுகளையும் திறந்து வைத்துவிட்டு உள்ளே சென்று தூய்மை செய்துள்ளார். 

அப்போது அந்த வீட்டிற்குள் வந்த கரடி பாதுகாவலரை தாக்கியது. இதில் அவர் இடது கை மற்றும் மார்பில் பலத்த காயம் ஏற்பட்டு பலியானார் என்றார். பாபுவின் குடும்பத்திற்கு வனத்துறையினர் ரூ.10 லட்சம் இழப்பீடு அறிவித்தனர். 

தாக்குதலைத் தொடர்ந்து, கரடியை பூங்கா அதிகாரிகள் தேனைப் பயன்படுத்தி மீண்டும் அதன் கூண்டிற்குள் அடைத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.