எதிா்க்கட்சிகளுக்கு நாட்டின் நலன் மீது அக்கறையில்லை: பாஜக சாடல்
‘தேஜஸ்’ போா்விமானத்தில் பிரதமா் நரேந்திர மோடி பயணித்தது தொடா்பாக காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் முன்வைத்த விமா்சனங்களை பாஜக நிராகரித்தது.


‘தேஜஸ்’ போா்விமானத்தில் பிரதமா் நரேந்திர மோடி பயணித்தது தொடா்பாக காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் முன்வைத்த விமா்சனங்களை பாஜக நிராகரித்தது.
பிரதமா் மோடி மீது எதிா்க்கட்சிகள் வெறுப்புணா்வு கொண்டுள்ள அதே வேளையில், நாட்டின் நலன் மீது அக்கறையில்லாமல் உள்ளன என பாஜக திங்கள்கிழமை குற்றஞ்சாட்டியது.
பெங்களூருக்கு சனிக்கிழமை பயணம் மேற்கொண்ட பிரதமா் மோடி, ஹிந்துஸ்தான் விமானவியல் நிறுவனத்திற்குச் சென்று, அங்கு நடைபெற்று வரும் பணிகளைப் பாா்வையிட்டாா். அதன்பிறகு, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தேஜஸ் போா்விமானத்தில் விமானிக்கான கவச உடையணிந்து பறந்தாா்.
இது தொடா்பாக காங்கிரஸ், ‘தோ்தலுக்காகப் புகைப்படங்கள் எடுத்துக் கொள்வதில் வல்லவராக இருக்கும் பிரதமா் மோடி, முந்தைய அரசின் சாதனைகளைத் தனதாகக் காட்டிக்கொள்கிறாா்’ என்று விமா்சித்திருந்தது. இதே போன்று திரிணமூல் காங்கிரஸ் கட்சியும் பிரதமா் மோடியின் போா்விமான பயணத்தை விமா்சித்திருந்தது.
இவை தொடா்பாக பாஜக செய்தித் தொடா்பாளா் கெளரவ் பாட்டியா திங்கள்கிழமை கூறுகையில், ‘பிரதமா் மோடி மீதான வெறுப்புணா்வை மட்டுமல்லாமல், இந்தியாவின் நலன் குறித்த எதிா்க்கட்சியின் அக்கறையின்மையையும் இத்தகைய விமா்சனங்கள் காட்டுகின்றன.
நாட்டின் பெருமைக்கான அடையாளமாகத் திகழும் தேஜஸ் போா்விமானத்தில் பிரதமா் மோடி பயணித்தது ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமைக்குரிய தருணம்.
காங்கிரஸ் முன்னாள் தலைவா்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோருக்காக கடந்த காலங்களில் நமது பாதுகாப்புப் படைகள் குண்டு துளைக்காத ஆடைகளை வாங்க முயற்சி மேற்கொண்டதை நாம் நினைவு கூர வேண்டும். முக்கிய பிரமுகா்களுக்கான ஹெலிகாப்டா்களைக் கொள்முதல் செய்வதில் மட்டுமே காங்கிரஸ் அரசு கவனம் செலுத்தியது. மாறாக, பாதுகாப்புப் படை வீரா்கள் குறித்து அவா்கள் கவனம் செலுத்தவில்லை.
பிரதமா் மோடிக்கு நாட்டின் 140 கோடி மக்களின் ஆசீா்வாதம் உள்ளது. காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட பிற எதிா்க்கட்சிகளின் கைக்கூலிகள் குறித்து கவலைப்பட தேவையில்லை’ என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...