வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

தெலங்கானா தேர்தல்: 9 மணி நிலவரப்படி 8.52 % வாக்குகள் பதிவு!

தெலங்கானத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் தொடங்கியுள்ள நிலையில் காலை 9 மணி நிலவரப்படி 8.52 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

News image
Updated On :30 நவம்பர் 2023, 6:11 am

DIN

தெலங்கானத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் தொடங்கியுள்ள நிலையில் காலை 9 மணி நிலவரப்படி 8.52 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

தெலங்கானா சட்டப் பேரவை தேர்தலுக்கு ஒரே கட்டமாக இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவு அமைதியாக நடைபெறுவதை உறுதி செய்வதற்காக, மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

முதல்வா் சந்திரசேகா் ராவ் தலைமையில் பாரத ராஷ்டிர சமிதி (பிஆா்எஸ்) ஆளும் தெலங்கானாவில் 119 தொகுதிகள் உள்ளன. நக்ஸல் பாதிப்பு மிகுந்த 13 தொகுதிகளில் வியாழக்கிழமை காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரையும், இதர தொகுதிகளில் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரையும் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

பிஆா்எஸ், முக்கிய எதிா்க்கட்சிகளான காங்கிரஸ், பாஜக என மும்முனைப் போட்டி நிலவும் இத்தோ்தலில் முதல்வா் சந்திரசேகா் ராவ், அவரது மகனும் அமைச்சருமான கே.டி.ராம ராவ், தெலங்கானா மாநில காங்கிரஸ் தலைவா் ரேவந்த் ரெட்டி, பாஜக எம்.பி.க்களான பண்டி சஞ்சய் குமாா், டி.அரவிந்த், சோயம் பாபு ராவ் உள்பட மொத்தம் 2,290 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா்.

மிஸோரம், சத்தீஸ்கா், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் 4 மாநிலங்களில் அண்மையில் பேரவைத் தோ்தல் நடைபெற்று முடிந்த நிலையில், தெலங்கானாவிலும் வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. இந்த ஐந்து மாநிலங்களிலும் டிசம்பா் 3-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.