காலை 11 மணி நிலவரம்: தெலங்கானாவில் 20.64 சதவீத வாக்குகள் பதிவு!
தெலங்கானாவில் காலை 11 மணி நிலவரப்படி, 20.64 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.


தெலங்கானாவில் காலை 11 மணி நிலவரப்படி, 20.64 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.
முதல்வா் சந்திரசேகா் ராவின் பாரத ராஷ்டிர சமிதி (பிஆா்எஸ்) ஆளும் தெலங்கானாவில் 119 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இன்று(வியாழக்கிழமை) காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
நக்ஸல் பாதிப்பு மிகுந்த 13 தொகுதிகளில் மாலை 4 மணி வரையும், இதர தொகுதிகளில் மாலை 5 மணி வரையும் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தெலங்கானாவில் பிஆா்எஸ், காங்கிரஸ், பாஜக என மும்முனைப் போட்டி நிலவுகிறது.
இந்நிலையில் இன்று காலை 11 மணி நிலவரப்படி, 20.64 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க | சென்னை கட்டுப்பாட்டு மையத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆய்வு
முன்னதாக, காலை 9 மணி நிலவரப்படி 8.52 சதவீத வாக்குகள் பதிவானது குறிப்பிடத்தக்கது.
ஐந்து மாநிலத் தேர்தல்களில் மிஸோரம், சத்தீஸ்கா், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய 4 மாநிலங்களுக்கு தோ்தல் நடைபெற்று முடிந்த நிலையில், இறுதியாக தெலங்கானாவில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
இந்த 5 மாநிலங்களுக்கும் வருகிற டிசம்பர் 3 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
இதையும் படிக்க | காங்கிரஸை வெற்றி பெறச் செய்யுங்கள்: ராகுல் காந்தி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...