கர்நாடகத்தில் முதியோர் ஓய்வூதியத்தை உயர்த்த சித்தராமையா திட்டம்

கர்நாடகத்தில் முதியோர் ஓய்வூதியத்தை ரூ.2,000 ஆக உயர்த்துவதற்கு,  தேவையான நடவடிக்கைகளை தனது அரசு எடுக்கும் என்று மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
கர்நாடகத்தில் முதியோர் ஓய்வூதியத்தை உயர்த்த சித்தராமையா திட்டம்


பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் முதியோர் ஓய்வூதியத்தை ரூ.2,000 ஆக உயர்த்துவதற்கு, அடுத்த மாநில பட்ஜெட்டில் தேவையான நடவடிக்கைகளை தனது அரசு எடுக்கும் என்று மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

பல்வேறு துறைகளில் மாநில விருதுகள் பெற்ற முதியவர்களை கௌரவிக்கும் நிகழ்ச்சியின் போது பேசிய சித்தராமையா, ​​“அடுத்த பட்ஜெட்டில் இது குறித்து முடிவு எடுக்கப்படும்” என்றார்.

மேலும் பேசிய அவர், முதியோர்களுக்கு ரூ.2,000 ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்ற தனது அமைச்சரவை உறுப்பினர் லட்சுமி ஹெப்பால்கரின் கோரிக்கை தீவிரமாக பரிசீலிக்கப்படும் என்றார்.

தற்போது, ​​மாநிலத்தில் தகுதியான முதியோர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படுகிறது. பெரியவர்களை மரியாதையுடன் நடத்துவதும், அவர்களின் வாழ்க்கை அனுபவங்களை ஏற்றுக்கொள்வதும் பெரியவர்களுக்கு நாம் கொடுக்கும் மரியாதையாகும்," என்றும் சித்தராமையா கூறினார். மேலும், அவர்கள் நம்முடன் இருக்கும் வரை அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ்வதற்கு இது வகை செய்யும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com