எரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

வந்தே பாரத்துக்கு காவி நிறம் ஏன்? மத்திய அமைச்சர் கூறும் அறிவியல் காரணம்

புதிய வந்தே பாரத் ரயிலுக்கு காவி நிறம் அடிக்கப்பட்டது குறித்து மத்திய ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம் அளித்துள்ளார்.

News image
Updated On :5 அக்டோபர் 2023, 8:09 am

DIN

புதிய வந்தே பாரத் ரயிலுக்கு காவி நிறம் அடிக்கப்பட்டது குறித்து மத்திய ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம் அளித்துள்ளார்.

நாடு முழுவதும் தற்போது 34 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்திற்குள் இரண்டு ரயில்களும், தமிழகத்திலிருந்து பிற மாநிலங்களுக்கு இரண்டு ரயில்களும் இயக்கப்படுகின்றன.

இதில், கடந்த செப்டம்பர் 24-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கி வைக்கப்பட்ட  9 ரயில்களில் ஒரு ரயிலுக்கு மட்டும் காவி நிறம் அடிக்கப்பட்டிருந்தது.

காசர்கோட்டில் இருந்து திருவனந்தபுரம் வரை இயக்கப்படும் ரயிலுக்கு மட்டும் வெள்ளை - நீல நிறத்திற்கு பதிலாக காவி நிறம் அடிக்கப்பட்டு அரசியல் செய்வதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்தனர்.

இந்த நிலையில், வந்தே பாரத் ரயிலுக்கு காவி நிறம் அடிக்கப்பட்டதற்கு அரசியல் காரணம் கிடையாது என்று செய்தியாளர்களுடனான கலந்துரையாடலின் போது அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

Story image

இதுகுறித்து அஸ்வினி வைஷ்ணவ் கூறியது:

“மனிதர்களின் கண்களுக்கு இரண்டு நிறங்கள் மட்டும்தான் நீண்ட தூரத்தில் இருந்தால்கூட தெரியும். ஒன்று காவி, மற்றொன்று மஞ்சள். ஐரோப்பா நாடுகளில் 80 சதவிகித ரயில்கள் இந்த இரண்டு நிறத்தில்தான் இயக்கப்படுகின்றன.

கண்களுக்கு எளிதில் தெரியும் என்பதால்தான், விமானம் மற்றும் கப்பல்களின் கருப்புப் பெட்டிகள் காவி நிறத்தில் உள்ளன. மீட்புப் படகுகள் மற்றும் உயிர் காக்கும் ஆடைகளும் காவி நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

வந்தே பாரத்துக்கு காவி நிறம் அடிக்கப்பட்டதில் எந்த அரசியலும் இல்லை. 100 சதவிகிதம் அறிவியலின் அடிப்படையிலேயே இந்த நிறம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.” என்றார்.

வந்தே பாரத் ரயில் பெட்டிகள் அனைத்தும் சென்னை பெரம்பூர் ரயில்வே பணிமனையில் தயாரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.