5 மாநில தேர்தலில் 16 கோடி வாக்காளர்கள்; டிச. 3ஆம் தேதி தேர்தல் முடிவு

மிசோரம், சத்தீஸ்கர் உள்பட ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் 16 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கவிருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
5 மாநில தேர்தலில் 16 கோடி வாக்காளர்கள்; டிச. 3ஆம் தேதி தேர்தல் முடிவு


புது தில்லி: மிசோரம், சத்தீஸ்கர் உள்பட ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் 16 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கவிருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

புது தில்லியில் இன்று தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், ஐந்து மாநில தேர்தல் தேதிகள் குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.

அப்போது அவர் பேசுகையில், மிசோரம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், தெலங்கான ஆகிய ஐந்து மாநிலங்களிலும் 16 கோடி பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். இவர்களில் 8.2 கோடி ஆண்கள், 8.7 கோடி பெண்கள் ஆவர்.

இவர்களுக்காக 5 மாநிலங்களிலும் 1.77 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படவிருக்கின்றன. இதில் 8,000 வாக்குச்சாவடிகள் பெண்களால் மேலாண்மை செய்யப்படும் என்று அறிவித்துள்ளார்.

ஐந்து மாநில தேர்தல் தேதி

ஐந்து மாநிலங்களில் சத்தீஸ்கர் மாநிலத்தில் மட்டும் நவம்பர் 7 மற்றும் 17ஆம் தேதி என இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறவிருக்கிறது. 

மிசோரம் மாநிலத்தில் நவம்பர் 7ஆம் தேதி, மத்தியப் பிரதேசத்தில் நவம்பர் 17ஆம் தேதி, ராஜஸ்தானில் நவம்பர் 23ஆம் தேதி, தெலங்கானாவில் நவம்பர் 30ஆம் தேதி என ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது.

அனைத்து மாநிலங்களுக்கும் வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 3-ஆம் தேதி நடைபெற்று அன்றே தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும். இந்த தேர்தல் நடைமுறை டிசம்பர் 5ஆம் தேதி நிறைவுபெறுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து 5 மாநிலங்களிலும் தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com