
ஹைதராபாத்: ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில், விமானம் கடத்தப்படும் என்று மிரட்டல் மின்னஞ்சல் வந்ததைத் தொடர்ந்து ஹைதராபாத்-துபாய் விமானம் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் இந்த மிரட்டல் புரளி என அறிவிக்கப்பட்டது என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
நேற்று மாலை விமான நிலைய முனைய மேலாளருக்கு வந்த மின்னஞ்சலில், ஹைதராபாத்-துபாய் விமானத்தை ஐ.எஸ்.ஐ உளவாளி கடத்துவார் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கு விமான நிலையத்தில் வேறு சிலரிடமிருந்து உதவி கிடைத்ததாக தெரிவிக்கப்பட்டது.
இது குறித்து சைபராபாத் காவல் ஆணையரகத்தின் மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது:
ஹைதராபாத்-துபாய் விமானம் குறித்த பாதுகாப்பு சோதனைகளுக்குப் பிறகு மின்னஞ்சல் புரளி என்று அறிவிக்கப்பட்டது. இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருவகிறது. மேலும் அஞ்சல் அனுப்பியவரைக் கண்டுபிடிப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும், கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இதனால் துபாய் செல்லும் விமானம் ரத்து செய்யப்பட்டு, பயணிகள் வேறு விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.