ஆசிய கோப்பைக்கான மகளிர் ஹாக்கி அணி அறிவிப்பு

ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடைபெற உள்ள ஆசிய கோப்பை தொடருக்கான மகளிர் ஹாக்கி அணி அறிவிப்பு
இந்திய மகளிர் ஹாக்கி அணி (கோப்புப் படம்)
இந்திய மகளிர் ஹாக்கி அணி (கோப்புப் படம்)

அக்டோபர் 27 முதல் நவம்பர் 5 வரை நடைபெற உள்ள ஆசிய கோப்பை தொடருக்கான 20 பேர் கொண்ட மகளிர் ஹாக்கி அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் சீனாவின் ஹாங்சோ நகரில் நடந்த 19வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய அணி ஆசிய கோப்பை போட்டியில் ஜப்பான், சீனா, கொரியா, மலேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுடன் போட்டியில் பங்கேற்க உள்ளது.

இந்திய மகளிர் அணியின் கேப்டனாக சவிதா புனியா மற்றும் துணை கேப்டனாக டீப் கிரேஸ் எக்கா ஆகியோர் உள்ளனர். அக்டோபர் 27 ஆம் தேதி தனது முதல் ஆட்டத்தில் தாய்லாந்து அணியை எதிர்கொள்ளும் இந்தியா, அதைத் தொடர்ந்து அக்டோபர் 28 ஆம் தேதி மலேசியாவுக்கு எதிரான ஆட்டத்தில் விளையாடுகிறது.

இந்தியா தனது மூன்றாவது ஆட்டத்தில் அக்டோபர் 30 ஆம் தேதி சீனாவை எதிர்கொள்கிறது, பின்னர் அக்டோபர் 31 ஆம் தேதி ஜப்பான் அணியுடனும், நவம்பர் 2 ஆம் தேதி கொரியாவுடனும் விளையாட உள்ளது. 

இந்தத்  தொடரின் அரையிறுதி மற்றும் இறுதி ஆட்டங்கள் முறையே நவம்பர் 4 மற்றும் 5-ஆம் தேதிகளில் நடைபெற உள்ளன.

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள அணியின் விவரங்கள்: 

சவிதா (கேப்டன்), டீப் கிரேஸ் எக்கா (துணை கேப்டன்), பிச்சுதேவி கரிபாம், நிக்கி ப்ரதான், உதிதா, இஷிகா சௌதரி, நிஷா, சலிமா, நேஹா, நவ்நீத் கௌர், சோனிகா, மோனிகா, ஜோதி, பல்ஜீத் கௌர், லால்ரெம்சியாமி, சங்கீதா குமாரி, தீபிகா, வந்தனா கட்டாரியா, ஷர்மிளா தேவி மற்றும் வைஷ்ணவி பால்கே.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com