கேஒய்சி அப்டேட் மோசடி.. பாலிவுட் நடிகருக்கே இந்த நிலையா?

அஃப்தாப் ஷிவ்தசானி, கேஒய்சி அப்டேட் லிங்கை கிளிக் செய்ததால், அவரது வங்கிக் கணக்கிலிருந்து 1.5 லட்சம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
கேஒய்சி அப்டேட் மோசடி.. பாலிவுட் நடிகருக்கே இந்த நிலையா?


மும்பை: பாலிவுட் நடிகரும் - தயாரிப்பாளருமான அஃப்தாப் ஷிவ்தசானி, தனது செல்லிடப்பேசிக்கு வந்த கேஒய்சி அப்டேட் லிங்கை கிளிக் செய்ததால், அவரது வங்கிக் கணக்கிலிருந்து 1.5 லட்சம் மோசடி செய்யப்பட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

கேஒய்சி லிங்க் என்று வருவதை யாரும் கிளிக் செய்ய வேண்டாம் என்று காவல்துறையினர் பல முறை எச்சரிக்கை விடுத்திருக்கும் நிலையில், அதுபோன்றதொரு மோசடியில் பாலிவுட் நடிகர் சிக்கியுள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த சம்பவம் நடந்துள்ளது. இது குறித்து பாந்த்ரா காவல்நிலையத்தில் அவர் புகார் அளித்துள்ளார். அந்த புகார் மனுவில், உங்கள் வங்கிக் கணக்குடன் பான் எண்ணை இணைக்காவிட்டால் இன்றுடன் உங்கள் வங்கிக் கணக்கு ரத்து செய்யப்பட்டுவிடும் என்றும், உடனடியாக அப்டேட் செய்ய இந்த லிங்க்கை கிளிக் செய்யவும் என்று குறுந்தகவல் வந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

சைபர் குற்றப்பிரிவு காவல்துறையினர் இது குறித்து விசாரித்து வருகிறார்கள். எந்த வங்கிக் கணக்குக்கு மோசடியாக பணம் சென்றடைந்ததோ அந்தக் கணக்கை முடக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும், அந்த லிங்கை நான் கிளிக் செய்ததுமே, வங்கியில் இருந்து பேசுவதாக ஒருவர் பேசி, எம்-பின் எண்ணைக் கேட்டார். நான் கொடுத்ததும், எனது வங்கிக் கணக்கிலிருந்து ரூ.1,49,999 -பரிமாற்றம் செய்யப்பட்டிருப்பதாக குறுந்தகவல் வந்தபோதுதான் நான் ஏமாற்றப்பட்டதை அறிந்தே என்றும் புகார் மனுவில் கூறியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com