அமெரிக்க, இஸ்ரேல் இலக்குகளை குறிவைத்து ஈரான் கடும் தாக்குதல்உள்ளூர் வேட்பாளர் வேண்டுமா? இறக்குமதி செய்த வேட்பாளர் வேண்டுமா? வேலுமணி பிரசாரம்தேர்தல் நேரம்! வாக்காளர் அட்டை அப்டேட் என்ற பெயரில் எஸ்எம்எஸ் வந்தால்?!ஏப். 3 முதல் தென் மாவட்டங்களில் மு.க. ஸ்டாலின் பிரசாரம்! விமான எரிபொருள் இருமடங்கு உயர்வு!உள்நாட்டு உற்பத்தி இயற்கை எரிவாயு விலையை உயா்த்தி மத்திய அரசு நடவடிக்கை வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதா: எதிா்க்கட்சிகளின் குற்றச்சாட்டு தவறானது- கிரண் ரிஜிஜு
/

வேட்பாளர்கள் முடிவு: தில்லியில் காங்கிரஸ் தேர்தல் குழுக் கூட்டம்

தில்லியில் காங்கிரஸ் தலைமையகத்தில் மத்திய தேர்தல் குழுக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

News image
Updated On :12 அக்டோபர் 2023, 12:38 pm

DIN

தில்லியில் காங்கிரஸ் தலைமையகத்தில் மத்திய தேர்தல் குழுக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

தெலங்கானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மிசோரம், சத்தீஸ்கர் ஆகிய 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதியை அக். 9 ஆம் தேதி தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

சத்தீஸ்கரில் நவம்பர் 7, நவம்பர் 17 தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. மிசோரத்தில் நவம்பர் 7-ஆம் தேதியும் மத்தியப் பிரதேசத்தில் நவம்பர் 17, ராஜஸ்தானில் நவம்பர் 25, தெலங்கானாவில் நவம்பர் 30-ஆம் தேதியும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அனைத்து மாநிலங்களுக்கும் வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 3-ஆம் தேதி நடைபெற உள்ளது. 

இதையடுத்து கட்சிகள் அனைத்தும் தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளன. வேட்பாளர்கள் பட்டியலையும் வெளியிட்டு வருகின்றன.

இந்நிலையில் தில்லியில் காங்கிரஸ் தலைமையகத்தில் மத்திய தேர்தல் குழுக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்றைய கூட்டத்தில் மிசோரம், சத்தீஸ்கர் மாநிலங்களில் வேட்பாளர்கள் பட்டியல் குறித்து முடிவெடுக்கப்படுகிறது. 

இதில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டுள்ளனர். 

தொடர்ந்து அக். 17 ஆம் தேதி நடைபெறும் கூட்டத்தில் ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் வேட்பாளர்கள் குறித்து முடிவு செய்யப்படவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.