ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

மும்பை: மதிய உணவு சாப்பிட்ட 16 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!

மும்பையின் கோவாண்டி பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட, 16 மாணவர்கள் வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

News image
கோப்புப் படம்.
Updated On :13 அக்டோபர் 2023, 2:09 pm

DIN

மும்பை: மும்பையின் கோவாண்டி பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட, 16 மாணவர்கள் வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

உணவு விஷமாகியதால் மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்கள் பிரிஹன் மும்பை மாநகராட்சியின் அனிக் காவ் பள்ளியைச் சேர்ந்தவர்கள் என்றார் மாநகராட்சி அதிகாரி ஒருவர்.

மதிய உணவுத் திட்டத்தின் கீழ் பள்ளியில் வழங்கப்பட்ட உணவை உட்கொண்ட 9 சிறுவர்களும், 7 சிறுமிகளும் சதாப்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவர்களின் உடல்நிலை தற்போது சீராக உள்ளதாக தெரியவந்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.