

உலகின் மிக உயர்ந்த எல்லைப் பாதுகாப்புப் பகுதியான சியாச்சின் மலை உச்சியில் செல்போன் கோபுரத்தை நிறுவி இந்திய ராணுவத்தினர் சாதனை படைத்துள்ளனர்.
இது தொடர்பான புகைப்படங்களையும் சமூக வலைதளத்தில் இந்திய ராணுவம் பகிர்ந்துள்ளது.
சியாச்சின் பனியாறு இமாலய மலைகளில் காரகோரம் மலைத்தொடரின் கிழக்குப் பகுதியில் உள்ளது. சியாச்சின் மலை உச்சியில் 15,500 அடி உயரத்தில் பிஎஸ்என்எல் உதவியுடன் இந்திய ராணுவத்தினர் செல்போன் கோபுரத்தை அமைத்துள்ளனர்.
செல்போன் கோபுரம் அமைக்கும்போது எடுத்த படங்களை மத்திய அமைச்சர்களும், தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திராவும் பகிர்ந்து கருத்து தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.