எளிய மக்களுக்கான வந்தே பாரத் ரயில் எப்படி இருக்கும்?

ஏசி வசதி அல்லாத, எளிய மக்களுக்கான வந்தே பாரத் ரயிலுக்கான 22 பெட்டிகள் தயாரிப்புப் பணி நிறைவடையும் நிலையில் உள்ளது. இ
ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்ட வந்தேபாரத் ரயிலின் ‘புஷ்- புல் லோகோ’ புகைப்படம்.
ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்ட வந்தேபாரத் ரயிலின் ‘புஷ்- புல் லோகோ’ புகைப்படம்.

ஏசி வசதி அல்லாத, எளிய மக்களுக்கான வந்தே பாரத் ரயிலுக்கான 22 பெட்டிகள் தயாரிப்புப் பணி நிறைவடையும் நிலையில் உள்ளது. இந்த ரயில் அக்டோபர் இறுதியில் தனது சேவையைத் தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எளிய மக்களுக்காக இயக்கப்பட உள்ள வந்தே பாரத் ரயிலின் லோகோ பெட்டிகள் தயாரிக்கும் பணி ஐசிஎஃப் தொழிற்சாலையில் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

நாட்டின் அதிவேக ரயிலாக வந்தே பாரத் இயக்கப்பட்டு வரும் நிலையில் அதன் கட்டணம் ஏழை எளிய மக்கள் பயணிப்பதற்கு ஏற்ற வகையில் இல்லை. இந்நிலையில் அந்தத்தரப்பு மக்களும் அதிவேக ரயிலில் பயணிக்கும் வகையில் ’புஷ் புல்’ எனும் ரயிலை இயக்க ரயில்வே நிா்வாகம் திட்டமிட்டுள்ளது.

இந்த ரயிலில் 1,800 பயணிகள் பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 130 கிலோ மீட்டர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வந்தே பாரத் ரயில்களில் பயணிக்கும் அதே அனுபவத்தை இந்த ரயில்களும் தரும் என்றும், ஏசி வசதி மற்றும் முன்பதிவு செய்யும் வாய்ப்பாற்ற சாதாரண மக்களுக்கும், மிகச் சிறந்த பயண அனுபவத்தைக் கொடுக்கும் என்றும், சிறப்பான படுக்கைவசதி, நவீன விளக்குகள் பொருத்தப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.

தற்போதிருக்கும் படுக்கை வசதிகொண்ட ரயில் பெட்டிகளின் உள்கட்டமைப்பைப் போன்றே இந்த சாதாரண வந்தே பாரத் ரயில் பெட்டிகளும் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆனால், எல்இடி விளக்குகள், மின் விசிறிகள், சுவிட்சுகள் போன்றவை மிக நவீனத்துடன் இருக்கும். ஒவ்வொரு இருக்கைக்கும் மொபைல் சார்ஜர் வசதி இருக்கும்.  ரயில் பெட்டிகளை இணைக்க நிரந்தர கப்லர்கள் பொருத்தப்பட்டிருப்பதால், ரயில் நிற்கும் போது ஏற்படும் அதிர்வுகளை பயணிகள் உணர முடியாது. இது பயண அனுபவத்தை சிறப்பானதாக மாற்றும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இம்மாத இறுதிக்குள் இந்த ரயில்சேவை தொடங்கப்படும்.   ‘எல்எச்பி’ பெட்டிகளுடன் இருபுறமும் மின்சார இன்ஜின் கொண்டு இயங்கும். இதற்கான பெட்டிகள் பெரம்பூா் ஐசிஎஃப் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதற்கான பிரத்யேக லோகோ தயாரிக்கும் பணி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதற்கான இன்ஜின் மேற்கு வங்க மாநிலத்தில் சித்தரஞ்சன் ‘லோகோமோட்டிவ் ஒா்க்ஸ்’ ஆலையில் தயாரிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து மத்திய ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,  ‘புஷ் புல்’ ரயிலுக்கான லோகோ தயாரிக்கப்பட்டு வருகிறது. ரயிலின் இரு முனைகளிலும் இந்த புஷ் புல் லோகோ இணைக்கப்பட்டவுடன் அதிக அளவிலான , பவா் ஜெனரேட்டா் போன்றவை தேவைப்படாது எனப் பதிவிட்டுள்ளாா்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com