தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

சத்தீஸ்கர்: காங்கிரஸின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு

சத்தீஸ்கர் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான காங்கிரஸின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் நாளை வெளியிடப்படும் என்று முதல்வர் பூபேஷ் பாகல் தெரிவித்தார்.

News image

கோப்புப் படம்.

Updated On :14 அக்டோபர் 2023, 12:44 pm

DIN

சத்தீஸ்கர் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான காங்கிரஸின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் நாளை வெளியிடப்படும் என்று முதல்வர் பூபேஷ் பாகல் தெரிவித்தார்.

சத்தீஸ்கரில் முதல்கட்டமாக 20 பேரவைத் தொகுதிகளுக்கு நவம்பா் 7-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இம்மாநிலத்தில் மீதமுள்ள 70 தொகுதிகளுக்கு நவம்பா் 17-இல் தோ்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. சத்தீஸ்கரில் முதல்கட்ட தோ்தல் நடைபெறும் 20 தொகுதிகளிலும் வேட்புமனு தாக்கல் வெள்ளிக்கிழமை தொடங்கியது. வேட்புமனு தாக்கலுக்கு கடைசி நாள் அக்டோபா் 20. 

மனுக்கள் மீதான பரிசீலனை 21-இல் நடைபெறுகிறது.

மனுக்களை திரும்பப் பெற அக்டோபா் 23 கடைசி நாளாகும். டிசம்பர் 3ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படும். சத்தீஸ்கரில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தில் தொடா்ந்து 3 முறை ஆட்சியில் இருந்த பாஜக கடந்த 2018-இல் காங்கிரஸிடம் ஆட்சியை இழந்தது. 90 தொகுதிகளைக் கொண்ட அந்த மாநிலத்தில் இப்போது பாஜகவுக்கு 15 எம்எல்ஏக்கள் மட்டுமே உள்ளனா். 

காங்கிரஸ் 68 எம்எல்ஏக்களைக் கொண்டுள்ளது. இந்த நிலையில் சத்தீஸ்கரில் காங்கிரஸின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் நாளை வெளியிடப்படும் என்று முதல்வர் பூபேஷ் பாகல் தெரிவித்துள்ளார். மேலும் இரண்டாம் கட்டத்திற்கான மற்றொரு பட்டியல் பின்னர் வெளியிடப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சத்தீஸ்கரில் 64 வேட்பாளா்கள் அடங்கிய இரண்டாவது கட்ட வேட்பாளா் பட்டியலை பாஜக திங்கள்கிழமை வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.