ராஜஸ்தானில் தனது ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டால், 2024-ல் மத்தியிலும் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் எனக் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.
பாரான் மாவட்டத்தில் கிழக்கு ராஜஸ்தான் கால்வாய் திட்டத்திற்கான விழிப்புணர்வு பிரசாரத்தை இன்று கார்கே தொடங்கிவைத்தார்.
வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு ராஜஸ்தானில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும். 2024-ல் அக்கட்சி மத்தியிலும் ஆட்சி அமைக்கும் என கார்கே உறுதிப்படத் தெரிவித்தார்.
2019 மக்களவைத் தேர்தலில் ராஜஸ்தானிலிருந்து 25 பாஜக எம்.பி.க்களை மக்கள் தேர்ந்தெடுத்தனர், ஆனால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களுக்கு நிதியோ, தண்ணீரையோ அவர்களால் தரமுடியவில்லை.
நாடு தழுவிய சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புக்கான காங்கிரஸின் கோரிக்கை குறித்து கார்கே, இந்த நடவடிக்கையின் மூலம் மக்களைப் பிளவுபடுத்த முயல்வதாக மோடி குற்றம் சாட்டினார்.
மதம் மற்றும் சாதியின் அடிப்படையில் மக்களைப் பிளவுபடுத்துவது பாஜகவின் வழக்கம் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
200 உறுப்பினர்களைக் கொண்ட ராஜஸ்தான் சட்டப்பேரவைக்கு நவம்பர் 25-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. டிசம்பர் 3-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
மே வெளியீட்டில் கருப்பு?

கிட்னியைத் தொடும் பதிவு..! பும்ராவைக் கேலி செய்த மனைவி!

கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு

வல்லவர்கள் நல்லவர்கள் ஆத்திகவாதியும், நாத்திகவாதியும்
வீடியோக்கள்

பணம் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகள், தேர்தல் நடத்தை விதிகள் பற்றி விளக்கிய Archana Patnaik
தினமணி வீடியோ செய்தி...

திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீட்டில் சிக்கலா? | DMK Alliance | MK Stalin | N Ramasubramanian
தினமணி வீடியோ செய்தி...

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

