75 ஆண்டுகளுக்குப் பிறகு காஷ்மீர் சாரதா கோயிலில் நவராத்திரி பூஜை: அமித் ஷா பெருமிதம்

1947 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஜம்மு- காஷ்மீர் சாரதா கோயிலில் நவராத்திரி பூஜைகள் நடத்தப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். 
ஜம்மு- காஷ்மீர் சாரதா கோயில்
ஜம்மு- காஷ்மீர் சாரதா கோயில்

1947 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஜம்மு- காஷ்மீர் சாரதா கோயிலில் நவராத்திரி பூஜைகள் நடத்தப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். 

இந்தியா - பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு ஜம்மு- காஷ்மீரின் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க சாரதா கோயிலில் நவராத்திரி பூஜைகள் எதுவும் நடத்தப்படவில்லை. பின்னர் அங்குள்ள பழங்குடியினரால் இந்த கோயில் சிதிலமடைந்தது.

பின்னர் அதே இடத்தில் புதிய கோயில் கட்டப்பட்டு கடந்த மார்ச் 23 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவால் திறக்கப்பட்டது. 

இதையடுத்து 1947 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஜம்மு- காஷ்மீர் சாரதா கோயிலில் நவராத்திரி பூஜைகள் நடத்தப்பட்டுள்ளதாகவும் இது ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்தது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். 

மேலும் இது காஷ்மீர் பள்ளத்தாக்கில் அமைதி திரும்புவதைக் குறிப்பது மட்டுமின்றி, பிரதமரின் தலைமையில் தேசத்தின் ஆன்மீக மற்றும் கலாசாரம் மீண்டும் எழுவதைக் குறிப்பதாகவும் கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com