இந்தியா உடனடியான போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்க வேண்டும்: கபில் சிபல்

துயரமான சம்பவம் நிகழும்போது ஒருதலைபட்சமாக இருப்பதற்கு இடம் கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.
கபில் சிபல் (கோப்புப்படம்)
கபில் சிபல் (கோப்புப்படம்)

மாநிலங்களவை உறுப்பினர் கபில் சிபல், காஸாவில் நடைபெற்று கொண்டிருக்கிற மனிதத்துவமற்ற நெருக்கடியான சூழலைக் கருத்தில் கொண்டு, இந்தியா உடனடியான போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்க வேண்டும் என வலியுறித்தியுள்ளார். 

மேலும், துயரமான சம்பவம் நிகழும்போது ஒருதலைபட்சமாக இருப்பதற்கு இடம் கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.

காஸாவில் அப்பாவி குழந்தைகள், உடல் உறுப்புகளை இழப்பதும் தலையை இழப்பதுமான மனித்துவமற்ற, நெருக்கடியான சூழல் நிகழ்வதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.

அக்.7 ஹமாஸ் நடத்திய தாக்குதலில் 1400 பேர் பலியாகினர். அதன் பிறகு 20-வது நாளாகத் தொடர்ந்து வரும் இஸ்ரேலின் தாக்குதலில் காஸாவில் 6500-க்கும் மேல் பலியாகியுள்ளதாக காஸா அமைச்சகம் தெரிவித்துள்ளது.

முன்னாள் சட்டத்துறை அமைச்சரும் தற்போது மாநிலங்களவை உறுப்பினருமான கபில் சிபல் தனது எக்ஸ் பக்கத்தில், “அப்பாவி குழந்தைகள் உடல் உறுப்புகள் இழப்பதும் அவர்கள் தலை துண்டாவதுமான காட்சிகள் நிகழ்கின்றன. குடிமக்கள் கொல்லப்படுவதுமாக மனிதத்துவமற்ற நெருக்கடியான சூழல் காஸாவில் நிலவுகிறது. அதனை பார்க்கும் போது இதயம் துடிப்பதுடன் ஏற்றுக்கொள்ளவும் இயலவில்லை. இந்தியா உடனடி போர் நிருத்தத்திற்கு அழைப்பு விடுக்க வேண்டும். துயரமான சூழலில் ஒருதலைபட்சமாக இருப்பதற்கு இடம் கிடையாது” எனத் தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com