மாணவி மீது அமிலம் வீசிய பள்ளி தலைமை ஆசிரியர் இடைநீக்கம்!

கர்நாடகத்தின், சித்ரதுர்காவில் மாணவி மீது தலைமை ஆசிரியர் அமிலம் வீசிய சம்பவம் நடந்தேறியுள்ளது. 
மாணவி மீது அமிலம் வீசிய பள்ளி தலைமை ஆசிரியர் இடைநீக்கம்!

கர்நாடகத்தின், சித்ரதுர்காவில் மாணவி மீது தலைமை ஆசிரியர் அமிலம் வீசிய சம்பவம் நடந்தேறியுள்ளது. 

ஜோடிச்சிக்கேனஹள்ளியில் அரசு மேல்நிலைப் பள்ளியில் சிஞ்சனா(8). இரண்டாம் வகுப்பு படித்துவருகிறார். தசரா விடுமுறைக்குப் பின்னர் பள்ளிக்குத் திரும்பியுள்ளார். 

அப்போது, மாணவர்களின் கழிவறையைச் சுத்தம் செய்துகொண்டிருந்தபோது சிறுமி சிஞ்சனா கழிவறைக்கு அருகில் சென்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தலைமை ஆசிரியர் சுத்தம் செய்யும் அமிலத்தை எடுத்து சிறுமி மேல் வீசியுள்ளார். 

இதனால், சிறுமிக்கு முதுகில் பலத்த தீக்காயம் ஏற்பட்டது. பதறிப்போன தலைமை ஆசிரியர் அவளை மருத்துவமனையில் சேர்த்தார். 

இதையடுத்து தலைமை ஆசிரியர் கூறுகையில், மாணவர்களின் கழிவறையை சுத்தம் செய்துகொண்டிருந்த போது ​​சிஞ்சனா அங்கு வந்ததாகவும், அவரை திரும்பிச் செல்லும்படி கூறியதாகவும், இதற்கிடையில் பாக்கெட்டில் வைத்திருந்த பொடி தவறுதலாக சிறுமி மீது விழுந்ததாகவும் அவர் கூறினார். 

தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சிஞ்சனாவின் பெற்றோர் சித்ரதுர்கா கிராமிய காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 

இதனையடுத்து, அரசு மேல்நிலைப் பள்ளியில் பணிபுரியும் தலைமை ஆசிரியர் ரங்கசாமியை பொதுக்கல்வித்துறை இணை இயக்குனர் ரவிசங்கர ரெட்டி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com