களமசேரி குண்டுவெடிப்பு - வெளியான புதிய தகவல்
களமசேரி மத வழிபாட்டுக் கூடத்தில் வெடித்தது ஐஇடி வகை குண்டு என அம்மாநில டிஜிபி ஷேக் தர்வேஷ் சாஹிப் தகவல் தெரிவித்துள்ளார்.


களமசேரி மத வழிபாட்டுக் கூடத்தில் வெடித்தது ஐஇடி வகை குண்டு என அம்மாநில டிஜிபி ஷேக் தர்வேஷ் சாஹிப் தகவல் தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலம், எர்ணாகுளம் அருகே களமசேரி பகுதியில் உள்ள கிறிஸ்தவ மத கூட்டரங்கல் இன்று காலை மத வழிபாடு நடைபெற்றுக்கொண்டிருந்தபோது திடீரென அடுத்தடுத்து குண்டு வெடித்தன. இதில் பெண் ஒருவர் பலியானார். 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இச்சம்பவத்தில் படுகாயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இருப்பினும் அதில் 5 பேர் கவலைக்கிடமாக உள்ளனர். மத வழிபாட்டு அரங்கில் குண்டு வெடிப்பு நடந்தது எப்பது என கேரள காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குண்டு வெடிப்பு நடந்த இடம் முழுவதும் காவல்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் குண்டுவெடிப்பைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து விசாரிக்க 8 பேர் கொண்ட தேசிய பாதுகாப்புப் படை கேரளத்துக்கு விரைந்துள்ளது. இது மிகவும் துரதிருஷ்டவசமான சம்பவம். சம்பவம் தொடர்பான விவரங்களை சேகரித்து வருகிறோம். அனைத்து உயர் அதிகாரிகளும் எர்ணாகுளத்தில் உள்ளனர். நாங்கள் அதை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறோம்.
விசாரணைக்கு பிறகே கூடுதல் விவரங்ள் தெரிய வரும் இவ்வாறு கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார். இதனிடையே மத வழிபாட்டுக் கூடத்தில் குண்டு வெடித்தது குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சம்பவம் குறித்து கேட்டறிந்தார்.
சம்பவ இடத்துக்கு தேசிய புலனாய்வு முகமை, தேசிய பாதுகாப்புப் படை விரைந்து செல்ல அவர் உத்தரவிட்டுள்ளார்.
மதவழிபாட்டுக் கூடத்தில் வெடித்தது குறைந்த சக்கிகொண்ட டிபன் பாக்ஸ் ஐஇடி வகை வெடிகுண்டு. சம்பவம் தொடர்பாக அனைத்து கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருகிறது. இச்சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது என மாநில டிஜிபி ஷேக் தர்வேஷ் சாஹிப் தகவல் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...