தேர்தல் பணிகளுக்காக கூடுதல் பணியிடங்கள் - அரசாணை வெளியீடுதிருநள்ளாறு சனீஸ்வரர் கோயிலில் நடிகர் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம்திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் தேரோட்டம்: துர்கா ஸ்டாலின் பங்கேற்பு!ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் கே.பி.சுந்தராம்பாள் சிலையை முதல்வர் திறந்துவைத்தார்ஈரானை உலுக்கும் தாக்குதல்கள்: பலி 1,300-ஐ கடந்தது!மார்ச் முதல் வாரத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து 52,000 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசுசமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியது
/

மன் கி பாத் நிகழ்ச்சியில் தமிழ் எழுத்தாளரைப் பாராட்டிய பிரதமர் மோடி!

மன் கி பாத் நிகழ்ச்சியில் தமிழ் எழுத்தாளருக்கு பாராட்டு தெரிவித்தார் பிரதமர் மோடி

News image
Updated On :29 அக்டோபர் 2023, 10:01 am

DIN

பிரதமர் மோடி இன்று (அக்டோபர் 29) 106-வது மன் கி பாத் நிகழ்ச்சியில் உரையாற்றினார். அதில் அவர் பேசியதாவது: இந்த மாதம் காதி விற்பனை கடந்த கால சாதனைகளை முறியடித்துள்ளது. கடந்த காலங்களில் ரூ.30 ஆயிரம் கோடிக்கு மட்டுமே விற்பனையான காதி பொருட்கள் இந்த மாதம் ரூ.1.25 லட்சம் கோடிக்கு விற்பனை ஆகியுள்ளது. 

விவசாயிகள், கைவினைக் கலைஞர்கள், குடிசைத் தொழில் செய்வோர் ஆகியோர் இந்த விற்பனையால் பயனடைந்துள்ளனர். சுற்றுலா செல்லும்போதும், ஆன்மிக யாத்திரை செல்லும்போதும் அப்பகுதியில் தயாரிக்கப்படும் பொருட்களை வாங்குங்கள். உங்களது பட்ஜெட்டில் அதற்கு நிதி ஒதுக்குங்கள். 

தமிழ் எழுத்தாளர் சிவசங்கரி இலக்கியம் மூலம் Knit India என்ற இயக்கத்தை உருவாக்கியுள்ளார். இது இலக்கியத்தின் மூலம் நாட்டை இணைப்பதாகும். இதற்காக அவர் கடந்த 16 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். அவர் 18 இந்திய மொழிகளில் எழுதப்பட்ட இலக்கியங்களை மொழிபெயர்த்துள்ளார். 

சிவசங்கரி பல்வேறு இடங்களுக்குச் சென்று பயணத் தகவல்களை வெளியிட்டார். இது தமிழ் மற்றும் ஆங்கிலம் இரு மொழிகளிலும் உள்ளது. இந்தத் திட்டத்தில் 4 பெரிய தொகுதிகள் உள்ளன. ஒவ்வொரு தொகுதியும் இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. 

இதேபோல கன்னியாகுமரியைச் சேர்ந்த எழுத்தாளர் ஏ.கே.பெருமாளின் பணிகள் அனைவருக்கும் ஊக்கமளிப்பதாக உள்ளது. தமிழகத்தில் கதை சொல்லும் பாரம்பரியத்தை அவர் பாதுகாத்து வருகிறார். இந்தப் பணியில் 40 ஆண்டுகளாக அவர் பணியாற்றி வருகிறார். சிவசங்கரி, ஏ.கே.பெருமாளின் முயற்சிகள் அனைவராலும் பாராட்டத்தக்கது என்று குறிப்பிட்டுள்ளார் பிரதமர் மோடி. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.