கைப்பேசி பறிப்பின் போது பலியான பிடெக் மாணவி: குற்றவாளி சுட்டுக்கொலை

கைப்பேசி பறிப்பு சம்பவத்தின் போது 19 வயது பிடெக் மாணவி பலியான நிலையில், குற்றவாளியை காவல்துறையினர் சுட்டுக்கொன்றனர்.
கோப்புப் படம்
கோப்புப் படம்


காஸியாபாத்: கைப்பேசி பறிப்பு சம்பவத்தின் போது 19 வயது பிடெக் மாணவி பலியான நிலையில், குற்றவாளியை காவல்துறையினர் சுட்டுக்கொன்றனர்.

வெள்ளிக்கிழமை, கைப்பேசி பறித்தபோது, ஆட்டோவிலிருந்து தவறி விழுந்து பலத்த காயமடைந்த பிடெக் மாணவி பலியான நிலையில், திங்கள்கிழமை காலை, குற்றவாளியை காவல்துறையினர் என்கவுன்டர் செய்துள்ளனர்.

குற்றவாளியை காவல்துறையினர் துரத்திச் சென்றபோது, காவல்துறையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாகவும் பதிலுக்குக் காவல்துறையினர் திருப்பிச் சுட்டத்தில் குற்றவாளி பலியானதாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து காவல்துறையினர் கூறுகையில், கீர்த்தி சிங் என்ற பிடெக் மாணவி, தனது தோழிகளுடன் கல்லூரியிலிருந்து வெள்ளிக்கிழமை மாலை தேசிய நெடுஞ்சாலையில் ஆட்டோவில் வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது, குற்றவாளி ஜீதேந்திரா, கைப்பேசியை பிடுங்கும்போது, கீர்த்தி கீழே விழுந்து படுகாயமடைந்தார். சிகிச்சை பலனின்றி கீர்த்தி பலியானதால், காவல்துறையினர் ஜீதேந்திராவை தேடிவந்தனர்.

திங்கள்கிழமை காலை, காவல்துறை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, பைக்கில் சென்றுகொண்டிருந்த ஜீதேந்திராவை  காவல்துறையினர் பிடிக்க முயன்றனர். அப்போது காவலர்களை சுட்டுவிட்டு தப்பியோட முயன்ற ஜீதேந்திராவை காவல்துறையினர் திருப்பிச் சுட்டத்தில் அவர் கொல்லப்பட்டதாகக் கூறியுள்ளனர்.

வழிப்பறிப்பு, கொள்ளை என ஜீதேந்திரா மீது 12 வழக்குகள் இருந்ததும், அவர் 2020 மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com