மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌகான், புத்னி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட இன்று(திங்கள்கிழமை) வேட்புமனு தாக்கல் செய்தார்.
சத்தீஸ்கா், மத்திய பிரதேசம், மிஸோரம், ராஜஸ்தான், தெலங்கானா ஆகிய மாநிலங்களுக்கு நவம்பர் மாதத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ளது.
மத்தியப் பிரதேசத்தில் நவம்பர் 7-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் முடிவுகள் டிசம்பர் 3-ம் தேதி வெளியாகின்றன.
இந்நிலையில் 230 தொகுதிகளைக் கொண்ட மத்திய பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் புத்னி(Budhni) தொகுதியில் போட்டியிட பாஜக மூத்த தலைவரும் தற்போதைய முதல்வருமான சிவராஜ் சிங் சௌகான் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் பலரும் உடனிருந்தனர்.
வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்னதாக, சிவராஜ் சிங் சௌகான் நர்மதா நதியில் பூஜை செய்து வழிபாடு மேற்கொண்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
கடலூர் ஆயங்குடியில் ரமலான் சிறப்புத் தொழுகை!
புதுக்கோட்டையில் ஈகைப் பெருநாள் சிறப்புத் தொழுகை!
என்ன சொல்கிறார்? யாரைச் சொல்கிறார் நிவேதா பெத்துராஜ்?
ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர் முர்மு, பிரதமர் மோடி வாழ்த்து!
வீடியோக்கள்

வதந்தி - 2 டீசர்!
தினமணி வீடியோ செய்தி...

"Amit shah - EPS சந்திப்பின் பின்னணி இதுதான்”: விவரிக்கும் பத்திரிகையாளர் Priyan
தினமணி வீடியோ செய்தி...

ப்ளீஸ்..மன்னிச்சிடுங்க..தப்பா பேசிட்டேன் | R Parthiban | C. V. Shanmugam | Aadhav Arjuna | Rajini
தினமணி வீடியோ செய்தி...

4 நாள்களில் எல்லாம் தெரிந்துவிடும்! தில்லியில் EPS பேட்டி | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

