நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

தெலங்கானாவில் பாஜக ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம் இட ஒதுக்கீடு ரத்து: அமைச்சர் கிஷன் ரெட்டி

தெலங்கானாவில் பாஜக ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம் இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டு அது பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு வழங்கப்படும் என்று மத்திய கிஷன் ரெட்டி தெரிவித்தார். 

News image
 மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி
Updated On :30 அக்டோபர் 2023, 6:43 am

DIN

தெலங்கானாவில் பாஜக ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம் இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டு அது பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு வழங்கப்படும் என்று மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி தெரிவித்தார். 

தெலங்கானா மாநில பாஜக தலைவரும் மத்திய சுற்றுலாத் துறை அமைச்சருமான கிஷன் ரெட்டி, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பாஜக கூட்டத்தில் பேசுகையில்,' பிரதமர் நரேந்திர மோடி, கட்சியின் தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா மற்றும் மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட நட்சத்திர தலைவர்கள் வருகிற நவம்பர் 3 ஆம் தேதி முதல் தெலங்கானாவில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளவிருக்கின்றனர். 

தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பாஜகவினரின் வேட்புமனு தாக்கல் விரைவில் தொடங்கும்' என்று கூறினார். 

தெலங்கானாவில் பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த ஒருவர்தான் முதல்வராக தேர்வு செய்யப்படுவார் என்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதைக் குறிப்பிட்ட கிஷன் ரெட்டி, இது தெலங்கானாவில் ஒரு குறிப்பிடத்தக்க புரட்சியை ஏற்படுத்தும் என்றார். 

மேலும், தெலங்கானாவில் தலித் தலைவரை முதல்வராக்குவேன் என முதல்வர் சந்திரசேகர் ராவ் அளித்த வாக்குறுதியில் இருந்து பின்வாங்கிவிட்டதாகவும் குற்றம் சாட்டினார்.

தெலங்கானாவில் பாஜக ஆட்சிக்கு வரும்பட்சத்தில் முஸ்லீம் இட ஒதுக்கீடு திரும்பப் பெறப்பட்டு அந்த சலுகைகள் பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கு வழங்கப்படும் என்று கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.