மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள்துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை
/

நவ.3ல் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம்!

காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் பரிந்துரையை அடுத்து, வருகிற நவம்பர் 3 ஆம் தேதி காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் நடைபெற உள்ளது. 

News image
கோப்புப்படம்
Updated On :6 பிப்ரவரி 2024, 1:19 pm

DIN

காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் பரிந்துரையை அடுத்து, வருகிற நவம்பர் 3 ஆம் தேதி காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் நடைபெற உள்ளது. 

கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு காவிரி நீரைத் திறந்துவிடுவது குறித்து காவிரி ஒழுங்கற்றுக்குழு பரிந்துரைப்பதை காவிரி மேலாண்மை ஆணையம் செயல்படுத்தி வருகிறது. 

காவிரி நீா் ஒழுங்காற்றுக் குழுவின் 89-வது கூட்டம் அதன் தலைவா் வினித் குப்தா தலைமையில் நேற்று(திங்கள்கிழமை) காணொலி வழியாக நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழக உறுப்பினரான திருச்சி காவிரி வடிநீா் கோட்டத் தலைமைப் பொறியாளா் எம். சுப்பிரமணியன், தமிழக காவிரி தொழில்நுட்பக் குழு தலைவா் ஆா்.சுப்பிரமணியன் மற்றும் பிற 3 மாநில உறுப்பினா்களும் கலந்து கொண்டனா். 

இதில், கா்நாடக அணைகளில் உள்ள நீா் இருப்பு வரத்தை கணக்கிட்டு நவம்பா் மாதத்தில் (15 நாள்கள்) தமிழகத்திற்கு வினாடிக்கு 13,000 கனஅடி வழங்க அறிவுறுத்த வேண்டும் என தமிழகம் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. கர்நாடக அரசு தரப்பில், நீர்வரத்து இல்லாததால் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முடியாது என்று கூறப்பட்டது. 

இறுதியாக, நவம்பா் 1 முதல் 23- ஆம் தேதி வரை 23 நாள்களுக்கு வினாடிக்கு 2,600 கன அடி தண்ணீா் பிலிகுண்டுலுவில் கா்நாடக அணைகளிலிருந்து தமிழகத்திற்கு திறந்துவிடவேண்டும் என ஒழுங்காற்றுக் குழு பரிந்துரைத்தது. 

இதையடுத்து காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் பரிந்துரைக்கு ஒப்புதல் அளிக்கும் பொருட்டு, வருகிற நவம்பர் 3 ஆம் தேதி காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் நடைபெற உள்ளது. 

காவிரி ஆணையத் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் நடைபெறவுள்ள கூட்டத்தில் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க கர்நாடக  அரசுக்கு உத்தரவிடப்படும் என்று தெரிகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.