சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

ரோவர் பணிகள் நிறைவு!

நிலவின் தென் துருவத்தில் பிரக்யா ரோவர் தன் பணிகளை நிறைவு செய்ததாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

News image
Updated On :2 செப்டம்பர் 2023, 5:13 pm

DIN

இந்திய விண்வெளி ஆய்வு மையம், ஜூலை 14-ஆம் தேதி எல்விஎம் மாக்-3 ராக்கெட் மூலம் அனுப்பிய சந்திரயான் - 3 விண்கலம் திட்டமிட்டபடி புதன்கிழமை(ஆக. 23) மாலை 6.04 மணியளவில் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது. 

முதலில் லேண்டர் தரையிறங்கிய நிலையில் பின்னர் ரோவரும் தரையிறங்கி நிலவு மேற்பரப்பின் புகைப்படங்களை எடுத்து அனுப்பி வந்தது. 

இந்த புகைப்படங்களின் மூலமாக நிலவின் மேற்பரப்பில் கந்தகம்(சல்ஃபா்) இருப்பதை பிரக்யான் ரோவா் கண்டறிந்துள்ளதாகவும் ஹைட்ரஜனுக்கான தேடல் நடைபெற்று வருவதாகவும் இஸ்ரோ தெரிவித்திருந்தது. 

தொடர்ந்து, பிரக்யான் ரோவரின் செயல்பாடுகளை இஸ்ரோ வெளியிட்டு வருகிறது. 

இந்நிலையில், சந்திராயன் - 3 திட்டத்தில் நிலவின் தென் துருவத்தில் விக்ரம் லேண்டர் மூலம் தரையிறக்கப்பட்ட பிரக்யான் ரோவரின் பணிகள் நிறைவு பெற்றதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

மேலும், ரோவரின் பேட்டரிகள் முழுமையாக சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாகவும் அடுத்த சூரிய உதயத்தின்போது (செப்.22) ஒளியைப் பெரும் வகையில் சோலார் பேனல்கள் தயார் நிலையில் இருப்பதால் மீண்டும் பணிகளைத் துவங்க வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. ஒருவேளை சூரிய ஒளி படவில்லையென்றால் இந்தியாவின் நிரந்தர தூதராக ரோவர் நிலவில் இருக்கும் என்றும் இஸ்ரோ பதிவிட்டுள்ளது!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.