கூகுள் மூலம் விலை குறைந்த விமான டிக்கெட்டுகளை அறிய எளிய வழி!

பண்டிகை அல்லது திருவிழா அல்லது விடுமுறைக் காலங்களில் விலை குறைவான விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய வேண்டும் நினைப்பவர்களுக்கானது இது.
கூகுள் மூலம் விலை குறைந்த விமான டிக்கெட்டுகளை அறிய எளிய வழி!


பண்டிகை அல்லது திருவிழா அல்லது விடுமுறைக் காலங்களில் விலை குறைவான விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய வேண்டும் நினைப்பவர்களுக்கானது இது.

இது மட்டுமல்ல, ஆண்டில் எப்போதோ ஒரு முறை பயணிக்க அல்லது ஏதேனும் ஒரு சுற்றுலா செல்ல திட்டமிடும் முன்பு இந்த தகவலை தெரிந்து கொள்ளலாம்.

வெகு தொலைவில் இருக்கும் இடங்களுக்கும் கூட விலை குறைந்த விமான டிக்கெட்டுகளை எளிதாக முன்பதிவு செய்யலாம்.

பொதுவாக, விமான டிக்கெட்டுகளை எவ்வளவு முடியுமோ அவ்வளவு விரைவாக முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். ஒருவேளை உங்களுக்கு விடுமுறை குறித்து சரியான தகவல் கிடைக்கும்போது உடனடியாக டிக்கெட் எடுத்துவிடலாம்.

கூகுள் ஃபிளைட்ஸ் என்ற டூல் ஒன்று உள்ளது. இது, உங்களுக்கு மிகச் சிறந்த விமான டிக்கெட்டை காட்ட உதவும். கூகுளில் சென்று சிறந்த விமானங்களைத் தேடும் போது, கூகுள் ஃபிளைட் உடனடியாக சிறந்த விமான நிறுவனங்களைப் பட்டியலிடும். முதலில், விலை, தொலைவு, பயண நேரம் உள்ளிட்டவற்றை அடிப்படையாக வைத்து இந்தப் பட்டியல் இருக்கும். ஆனால், மற்றொரு டூல் ஒன்று உள்ளது. அது மிகச் சிறந்த விமான கட்டணத்தை அடிப்படையாகக் கொண்டு தேடும்.

அதாவது, கூகுள் ஃபிளைட்ஸ்-ல், விலை கிராஃப் பார்க்கலாம். ஒரே வழித்தடத்தில், தற்போதைய விலை, முந்தைய விலை உள்ளிட்ட விலைகளை கிராஃப் மூலம் ஒப்பிட்டுப் பார்க்க முடியும். உங்களது பயண தேதியை மாற்றியமைத்துக் கொள்ள முடியும் என்றால் பிரைஸ் கிராஃப்-ஐ கிளிக் செய்து எந்த மாதம் அல்லது வாரத்தில் விலை குறைகிறது என்பதை தெரிந்துகொண்டு, அதற்கேற்ப விமானத்தின் டிக்கெட்டை முன்பதிவு செய்து கொள்ளுங்கள்.

ஒருவேளை, விமான டிக்கெட்டை முன்பதிவு செய்வதற்கு முன், விலை குறைகிறதா என்று காத்திருக்க முடியுமானால், உங்களுக்கு பிரைஸ் டிரேக்கிங் உதவும். பிரைஸ் டிரேக்கிங்களை எனேபிள் செய்துவிட்டால், ஓரளவுக்கு விமான டிக்கெட் விலை குறைந்தாலும் கூட உடனடியாக உங்களுக்குத் தகவல் அனுப்பும். உங்களால், ஒரு குறிப்பிட்ட தேதியில் அல்லது அக்டோபரில் வருவது போல தொடர் விடுமுறை நாள்களை சரியாகக் குறிப்பிட்டும் அந்த நாளில் விலை குறைகிறதா என்றும் நோட்டிஃபிகேஷன் பெற முடியும். எந்த தேதியிலும் என்ற வகையிலும் உங்களால் டிக்கெட் விலை குறித்த தகவலை பெற முடியும். அடுத்த மூன்று முதல் 6 மாதங்களுக்கு இந்த நோட்டிஃபிகேஷன் ஆக்டிவாக இருக்கும். ஆனால், நாம் கூகுள் லாக் இன் செய்திருக்க வேண்டும் என்பதை மட்டும் நினைவில் கொள்ளுங்கள். 

ஃபில்டர்களைப் பயன்படுத்தலாம்..
இதில், ஃபில்டர்களைப் பயன்படுத்தி பல தகவல்களை அறியலாம். நிறுத்தங்கள், விமான நிறுவனம், எவ்வளவு எடையைக் கொண்டு செல்லலாம் போன்றவற்றையும் அறிந்து கொள்ள முடியும். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com